HOME»NEWS»LIFESTYLE»food maggi golgappa chocolate laced chicken nutella biryani foods that added to the miseries of 2020 esr ghta

Maggi கோல்கப்பா, சாக்லேட் பூசப்பட்ட சிக்கன், நியூடெல்லா பிரியாணி : 2020-ஆம் ஆண்டில் முகம்சுழிக்க வைத்த உணவுகள்..

ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காய்கறிகள், மசாலா பொருட்கள் இன்னும் பல பொருட்களுக்கு தனி குணங்கள் உண்டு. அவற்றை வேறொரு உணவுப் பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால் விளைவு விபரீதம் ஆகிவிடும்.

Maggi கோல்கப்பா, சாக்லேட் பூசப்பட்ட சிக்கன், நியூடெல்லா பிரியாணி : 2020-ஆம் ஆண்டில் முகம்சுழிக்க வைத்த உணவுகள்..
மாதிரி படம்
  • Share this:

ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காய்கறிகள், மசாலா பொருட்கள் இன்னும் பல பொருட்களுக்கு தனி குணங்கள் உண்டு. அவற்றை வேறொரு உணவுப் பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால் விளைவு விபரீதம் ஆகிவிடும். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் இந்த 2020-ஆம் ஆண்டில் நம்மை சுற்றி உள்ளவர்கள் செய்த வெறுக்கத்தக்க கலப்பின சேர்க்கை உணவுகளை இங்கே தொகுத்துள்ளோம். பின்வரும் மோசமான கலப்பின உணவினை வீட்டில் யாரும் பின்பற்றவேண்டாம்.

அருவெறுப்பான மேகி (MAGGI ABOMINATIONS) :

இந்தியாவில் மிகவும் பிரபலமான உடனடி நூடுல்ஸில் மேகியும் ஒன்று. 1980களின் முற்பகுதியில் இருந்து இந்தியர்கள் இந்த மேகியினை சுவைத்து வருகிறார்கள். இந்த டிஷ்ஷை வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் சமைக்க முடியும் என்பது தான் பலரையும் இதை ட்ரை செய்ய வைத்துள்ளது. காலப்போக்கில் இதில் சுவையான பல மசாலாக்கள் சேர்க்கப்பட்டது. இப்போது, சுவிஸ் நூடுல் பானி பூரி, தயிர், சாக்லேட், கீர் மற்றும் பீர் போன்றவற்றை கொண்டு அருவெறுப்பான மேகியை ஒருவர் செய்துள்ளார். இதை யாரவது ட்ரை செய்தால், குமட்டல் மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.வெண்டைக்காயுடன் போர்பன் பிஸ்கட் (ஓக்ரா) (BOURBON BISCUITS WITH BHINDI (OKRA)) :

இந்த கலவை இப்போது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது போல் தெரிகிறது. இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அந்த போர்பன் பிஸ்கட்டுகளை கொண்டு சமைத்த வெண்டைக்காய் துண்டுகளைப் பார்த்தால் நம்மை அது வாஷ்பேசினுக்கு அனுப்பிவிடும். அந்த சாக்லேட் சாண்ட்விச் பிஸ்கட்டுகள் 90-களில் வளர்ந்தவர்களின் (90's kids) வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும். மேலும் 90's கிட்ஸ்களின் அந்த இனிமையான நினைவுகளின் மீது இந்த மோசமான டிஷ், கல்லை போட்டது போல் தெரிகிறது. அனேகமாக இது 2K கிட்ஸ்கள் செய்த வேலையாக இருக்குமோ?

நியுட்டெல்லா பிரியாணி (NUTELLA BIRYANI) :

இந்தியா முழுவதும் பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாகும் என்பதில் சந்தேகமில்லை. கல்யாணத்தில் பிரியாணி போட்டால் தான் தாலி கட்டுவேன் என்று கூறும் அளவிற்கு இந்த பிரியாணி இந்தியர்களின் மனதை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. ஸ்விக்கியின் (Swiggy) ஒரு அறிக்கையின்படி, 2020ம் ஆண்டில் பிரியாணி மிகவும் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக உருவெடுத்தது. இந்த ருசியான முகலாய் டிஷ் (Mughlai dish) ஒரு ஹேசல்நட் மற்றும் கோகோ (hazelnut and cocoa) கலவையில் மோசமாக்கப்படுவதை பிரியாணி ரசிகர்கள் கண்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.சாக்லேட்டில் சிக்கன் விங்ஸ் (CHICKEN WINGS IN CHOCOLATE):

உலகளவில் அசைவ உணவு (non-vegetarians) உண்பவர்களுக்கு ப்ரைடு சிக்கன் விங்ஸ் (Fried chicken wings) மிகவும் பிடித்த சிற்றுண்டியாகும், அதே நேரத்தில் வார இறுதி நாட்களில் பல இந்திய வீடுகளில் இரவு உணவில் கோழி கறி (chicken curry) ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும். சாக்லேட் உலகளவில் பலரால் விரும்பப்படும் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில மேதாவிகள் இரண்டையும் இணைத்து ஒன்றாக வறுக்க முடிவு செய்தனர். நல்லவேளை இந்த கொடூரமான டிஷ்ஷுக்கு பலரும் கருத்து தெரிவிக்கவில்லை.

கடைசியாக ஒரு உணவு மிச்சமுள்ளது, இதை யாரேனும் சுவைத்தால் அவரின் இரவு உணவு அதோடு கட் ஆகிவிடும். அப்படிப்பட்ட உணவை காண வேண்டுமா? அதுதான், தர்பூசணி கெட்ச்அப்.

தர்பூசணி கெட்ச்அப் (Ketchup with Watermelon) :

இந்த காம்போவைப் பற்றி என்ன சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை, இது முற்றிலும் ஆரோக்கியமற்றதுடன் தீங்கையும் தரும்.'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று அதை விட்டுவிட்டு சுவைக்காகவும், நகைச்சுவைக்காகவும் இன்று பலவற்றைச் செய்து வருகின்றனர். ஆனால் அதை பார்க்கும் நபர்கள் தங்கள் வீடுகளில் அதை சமைத்து அந்தக் கொடூரத்தை மற்றவர்களை சுவைக்க கட்டாயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றது.
Published by:Sivaranjani E
First published: