மதுரையில் குட்டிக்குட்டித் தெருக்களில் கூட சுவை மிக்க கடைகள் உண்டு. அதில் முக்கியமாக அசைவ உணவுகளுக்குதான் அதிகமான கடைகள் இருக்கும். மதுரையின் ஸ்பெஷலான மட்டன் இட்லியை செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மட்டன் கீமா – 1 கப் (சிறிதாக வெட்டப்பட்ட மட்டன்)
கொத்தமல்லி – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
மட்டன் கீமா
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொறிய வேண்டும். அதன்பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் சிறிது வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அதனுடன் மட்டன் கீமா போட்டு நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றும் வரை விட்டு பின் கொத்தமல்லி, புதினா போட்டு கிளறிவிட்டால் மட்டன் கீமா ரெடி.
மதுரை மட்டன் இட்லி
இட்லி தட்டில் சிறிது மாவை ஊற்றிவிட்டு ஏற்கனவே செய்து வைத்த மட்டன் கீமாவையும் வைக்க வேண்டும். அதன் மேல் மீண்டும் சிறிது இட்லி மாவை ஊற்ற வேண்டும். பின்னர் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இந்த மட்டன் இட்லிக்கு சிக்கன் குழம்பு, சாம்பார், மிளகாய் பொடி என எது வேண்மானலும் வைத்து சாப்பிடலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.