ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வழக்கமான இட்லி இனி வேண்டாம்.. ட்ரை பண்ணுங்க மட்டன் இட்லி.. இதோ ரெசிபி...

வழக்கமான இட்லி இனி வேண்டாம்.. ட்ரை பண்ணுங்க மட்டன் இட்லி.. இதோ ரெசிபி...

மட்டன் இட்லி

மட்டன் இட்லி

Mutton Idly | மதுரையின் மட்டன் இட்லி ஈஸியாக செய்ய ரெசிபி..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரையில் குட்டிக்குட்டித் தெருக்களில் கூட சுவை மிக்க உணவுகள் கிடைக்கும். அதில் முக்கியமாக அசைவ உணவுகள் தயாரிக்கும் கடைகள்தான் அதிகமாக இருக்கும். இன்று மதுரையின் ஸ்பெஷலான மட்டன் இட்லியை செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

எண்ணெய் – 2 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தக்காளி – 1

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மட்டன் கீமா – 1 கப் (சிறிதாக வெட்டப்பட்ட மட்டன்)

கொத்தமல்லி – கொஞ்சம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை;

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொறிய வேண்டும். அதன்பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் சிறிது வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

மேலும் படிக்க...  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

சிறிது நேரம் கழித்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அதனுடன் மட்டன் கீமா போட்டு நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றும் வரை விட்டு பின் கொத்தமல்லி, புதினா போட்டு கிளறிவிட்டால் மட்டன் கீமா ரெடி.

மதுரை மட்டன் இட்லி

இட்லி தட்டில் சிறிது மாவை ஊற்றிவிட்டு ஏற்கனவே செய்து வைத்த மட்டன் கீமாவையும் வைக்க வேண்டும். அதன் மேல் மீண்டும் சிறிது இட்லி மாவை ஊற்ற வேண்டும். பின்னர் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இந்த மட்டன் இட்லிக்கு சிக்கன் குழம்பு, சாம்பார், மிளகாய் பொடி என எது வேண்மானலும் வைத்து சாப்பிடலாம். சாப்பிட சாப்பிட இன்னும் இன்னும் என்று கேட்கும் அளவிற்கு ருசியாக இருக்கும்.


First published:

Tags: Food, Mutton recipes