Home /News /lifestyle /

வெண் பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்குதா.. இன்னிக்கு மெட்ராஸ் சமையல் ஸ்பெஷல் ரவா பொங்கல் ட்ரை பண்ணுங்க!

வெண் பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்குதா.. இன்னிக்கு மெட்ராஸ் சமையல் ஸ்பெஷல் ரவா பொங்கல் ட்ரை பண்ணுங்க!

மெட்ராஸ் சமையல்

மெட்ராஸ் சமையல்

madras samayal : யூடியூப்பில் இல்லத்தரசிகள் முதல் ஆண்கள், குழந்தைகள் என அனைவராலும் அதிக பார்க்கப்படும் யூடியூப் சேனல் தான் மெட்ராஸ் சமையல்

    பொங்கல் கொண்டாட்டம் என்றவுடன் நம் வீடுகளில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் மாறி மாறி பரிமாறப்படும். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஆவது வெரைட்டியா எதாவது கொடுப்பாங்கன்னு பார்த்தா அவங்களும் அதே பொங்கல் தான் கொடுப்பாங்க. சைடிஷா வடை மட்டும் இல்லையென்றால் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒருவேளைக்கு அப்புறம் பொங்கல் உள்ள இறங்காது.  உங்கள் வீட்டிலும் இந்த பொங்கலுக்கு வெண் பொங்கலா செஞ்சி கோபப்படுத்துறாங்கள, அவங்கள ஒரு சின்ன சேஞ்சுக்கு இன்னிக்கு வித்தியாசமா ரவா பொங்கல் செய்ய சொல்லுங்க.

    டேஸ்டில் வெண் பொங்கலை விட ஒருபடி மேலே இருக்கும் என்கிறார் இந்த ரெசிபியை வழங்கும் ஸ்டெஃபி. யூடியூப்பில் இல்லத்தரசிகள் முதல் ஆண்கள், குழந்தைகள் என அனைவராலும் அதிக பார்க்கப்படும் யூடியூப் சேனல் தான் மெட்ராஸ் சமையல். இதில் ஸ்டெஃபி பலவிதமான ரெசிபி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று தான் இந்த ரவா பொங்கல். எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

    இதையும் படிங்க.. பொங்கல் திருநாளை ஆரோக்கியமான முறையில் வழிபட சிறுதானிய பொங்கல் ரெசிபி...

    தேவையான பொருட்கள்:

    ரவை, நெய், பாசிப்பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு

    செய்முறை:

    முதலில் குக்கரில் 1 கப் பாசிப்பருப்பை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

    இப்போது கடாயில் நெய் ஊற்றி அதில் மிளகு, முந்திரி, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து வறுக்க வேண்டும். இத்துடன் 1 கப் ரவையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.



    பின்பு வேக வைத்த பாசிப்பருப்பில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனுடன் வறுத்த ரவை கலவையை சேர்த்து தேவையான உப்பு சேர்க்க வேண்டும்.

    5 நிமிட விடாமல் கிளறி, நெய் ஊற்றி பொங்கல் பதத்தில் இறக்கினால் சூப்பரான ரவா பொங்கல் தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Pongal, Youtube

    அடுத்த செய்தி