ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இனி நாட்டுச் சர்க்கரை வாங்க வேண்டாம் : வீட்டிலேயே கரும்பு சாறில் எப்படி செய்வது என மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லித்தராங்க...

இனி நாட்டுச் சர்க்கரை வாங்க வேண்டாம் : வீட்டிலேயே கரும்பு சாறில் எப்படி செய்வது என மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லித்தராங்க...

நாட்டுச் சர்க்கரை

நாட்டுச் சர்க்கரை

Karumbu Juice: நாட்டுச் சர்க்கரையில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் செலினியம் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உடல் நலன் சார்ந்த அக்கறை இன்று பலருக்கும் வந்துவிட்டது. அதிலும் உடல் எடையை கட்டுப்பாட்டில் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து சாப்பிடுகிறார்கள். டயட் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இப்போது டீ , காஃபி , சர்க்கரையை தவிர்த்துவிடுவதும் வழக்கமாக இருக்கிறது. இனிப்பு சுவை தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம்தான். அப்படியே டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தாலும் நாட்டு சர்க்கரையைத்தான் பெரும்பாலானோர் இன்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இது சர்க்கரையை தவிர்ப்பதற்கான மாற்று வழி என்றும் கருதுகின்றனர்.

நாட்டுச் சர்க்கரை கூட கடையில் வாங்கும்போது அது தூய்மையான ஒரிஜினல் நாட்டுச் சர்க்கரையா அல்லது கலப்படம் உள்ளதா என்கிற சந்தேகமும் பலருக்கு இருக்கலாம். இனி அந்த கவலையே வேண்டாம். வீட்டிலேயே கரும்பு சாறு பயன்படுத்தி எப்படி நாட்டுச் சர்க்கரை செய்யலாம் என மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி செய்து பார்த்த முயற்சியை நீங்களும் டிரை பண்ணி பாருங்க...

நாட்டுச் சர்க்கரை நன்மைகள் :

நாட்டுச் சர்க்கரையில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், பாஸ்பரஸ், இரும்புசத்து, மற்றும் செலினியம் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன. அதோடு இயற்கையாகவே நாட்டுச் சர்க்கரையில் ஏராளமான தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அளவோடு சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவைக் கூட அதிகரிக்காது.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலிக்கு நாட்டுச் சர்க்கரை சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பவர்களும் சாப்பிடலாம். ஆஸ்துமா பிரச்சனை, மூச்சுத்திணறல், செரிமானமின்மை, வயிற்றுக்கோளாறு, உடல் சோர்வு, மார்புச் சளி, சருமத்தை பாதுகாக்க என நாட்டுச் சர்க்கரை பல பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

' isDesktop="true" id="653185" youtubeid="BvbyJ1Gr6Es" category="food">

மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபியின் நாட்டுச் சர்க்கரை செய்முறை :

வீடியோவில் ஸ்டெஃபி கரும்பு ஜூஸுக்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற கரும்புகளையே பயன்படுத்தியுள்ளார்.

முதலில் அதன் தோலை முற்றிலுமாக நீக்கிவிட்டார். பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்கிறார். அடுத்ததாக அதை மிக்ஸியில் அரைத்துக்கொள்கிறார்.

அரைபட கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்கிறார். பின் வந்த சாறை பிழிந்துக்கொள்கிறார். அடுத்தடுத்து அரைக்க தண்ணீரை தவிர்த்துவிட்டு பிழிந்த சாறையே மீண்டும் ஊற்றி நன்கு மைய அரைக்கிறார்.

பிசிஓடி , செரிமானப் பிரச்சனை... சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க

இப்படி அரைத்து சக்கைகளை வடிகட்டி எடுத்துக்கொள்கிறார். பின் பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்கவிடுகிறார். ஒன்றரை மணி நேரமாக நன்கு கொதித்து பாகு பதம் வருகிறது. பின் கைவிடாமல் நன்கு கிளறுகிறார்.

கெட்டிப்பதம் வந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிடுகிறார். அது நன்கு ஆறியதும் மறுநாள் அவற்றை உடைத்து மிக்ஸியில் மைய அரைக்க நாட்டுச் சர்க்கரை கிடைக்கிறது. அதன் வாசனையும், சுவையுமே அட்டகாசமாக இருப்பதாக ஸ்டெஃபி கூறுகிறார்.

இதே செய்முறை விளக்கத்தை நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க. பொங்களுக்கு வரும் கரும்பு அதிகமாக மீந்துபோனால் இப்படி நாட்டுச் சர்க்கரை செய்துவிடுங்கள்.

First published:

Tags: Cooking tips, Madras Samayal, Steffi, Sugar, Sugarcane Juice