HOME»NEWS»LIFESTYLE»food madras samaiyal steffi cup cake recipe with her daughter esr
Madras Samayal Trending : யூடியூப் பிரபலம் மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி தன் மகளுடன் சேர்ந்து சமைக்கும் முட்டையில்லா கப்கேக் ரெசிபி..!
குழந்தையாக இருந்தாலும் அம்மாவின் பக்குவத்தை அப்படியே கடைபடிக்கும் அந்த குழந்தையின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவிக்கின்றனர்.
அனேகமாக தமிழ்நாட்டு பெண்களுக்கு யூடியூப் மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபியை யாருக்கும் தெரியாமல் இருக்காது. சமையல் டிப்ஸ், சமையல் ரெசிபி என்றாலே மெட்ராஸ் சமையல்தான். அவர் சொல்லும் எந்த ரெசிபீக்களையும் நன்றாக இருக்குமா இருக்காதா என்று யோசிக்காமல் செய்து பார்ப்பார்கள். அதேபோல் அந்த உணவின் சுவையும் அப்படியே இருக்கும். அதேபோல் ஸ்டெஃபின் மெட்ராஸ் சமையல் பக்கம் சென்றாலே எந்த உணவையும் தேடிப்பார்க்கலாம். ஸ்டெஃபியின் மெட்ராஸ் சமையல் பக்கம் எப்போதும் யூடியூபில் டிரெண்ட்தான்.
இத்தனைக்கும் அவரின் பொருமைதான் காரணம். ஆம்..அவர் எந்த ரெசிபியை சொல்லிக்கொடுத்தாலும் பொருமையாக அதேசமயம் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ரெசிபிக்களை கொண்டுதான் சமையல் செய்வார். பேச்சிலர்களுக்குக் கூட ஸ்டெஃபி பரிட்சயம் எனலாம். அப்படி ஸ்டெஃபி தன் மகளுடன் சமைத்த முட்டையில்லா கப் கேக் மிகவும் டிரெண்டானது.
குழந்தையாக இருந்தாலும் அம்மாவின் பக்குவத்தை அப்படியே கடைபடிக்கும் அந்த குழந்தையின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவிக்கின்றனர். குழந்தையில் கியூட்டான செயல்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வைப்பதாகவும் கமெண்ட் தெரிவிக்கின்றனர். அப்படி ஸ்டெஃபி தன் மகளுடன் சமைத்த அந்த முட்டையில்லா கப் கேக் வீடியோவை நீங்களும் பார்க்க இதோ....
ஸ்டெஃபி இந்த வீடியோ மட்டுமல்லாது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவ்வபோது தன் மகளை வைத்து சில எளிமையான ரெசிபிக்களை டிரை செய்கிறார்.