ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பரோட்டாவுக்கு மாவு பிசைய தேவையில்லை... 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

பரோட்டாவுக்கு மாவு பிசைய தேவையில்லை... 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

பரோட்டா

பரோட்டா

நீங்களும் பரோட்டாவை விரும்பி சாப்பிடக் கூடியவர் எனில் இனி வீட்டிலேயே செய்யலாம். அதுவும் மாவை பிசைந்து கஷ்டப்பட தேவையில்லை... இப்படி எளிமையாகவே செய்யலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென் இந்திய உணவு வகைகளில் இன்று பரோட்டாவும் அடங்கிவிட்டது. அதுவும் தென் மாவட்டங்களில் கிடைக்கக் கூடிய பொரிச்ச பரோட்டா, கிழி பரோட்டாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இரவு நேரங்களில் தள்ளு வண்டி கடைகள் தொடங்கி ரெஸ்டாரண்டுகள் வரை இந்த பரோட்டாவுக்கு மவுசு அதிகம். அப்படி நீங்களும் பரோட்டாவை விரும்பி சாப்பிடக் கூடியவர் எனில் இனி வீட்டிலேயே செய்யலாம். அதுவும் மாவை பிசைந்து கஷ்டப்பட தேவையில்லை... இப்படி எளிமையாகவே செய்யலாம். ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்

சர்க்கரை - 1 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

பேக்கிஸ் சோடா - 2 சிட்டிகை

சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

முட்டை - 1 ( தேவைப்பட்டால் )

செய்முறை :

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அந்த மாவை பைப்பிங் பேக் அல்லது பால் கவர் என ஏதாவதொரு பை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் 2 கரண்டி மாவு சேர்த்து கூம்பு வடிவத்தில் இருக்கும் பகுதியின் அடியில் மிகவும் சின்னதாக வெட்டிக்கொள்ளுங்கள். ஓட்டை பெரிதானால் சரியான பதத்தில் பரோட்டா வராது.

ரவா இட்லி இப்படிதான் சுடனுமா..? கேரட் , பட்டாணி , பீன்ஸ் போட்டு ஹெல்தியா செய்ய ரெசிபி...

இப்போது தோசைக்கல் வைத்து அதில் எண்ணெய் தடவி அந்த மாவை எடுத்து இடியாப்பத்திற்கு சுற்றுவது போல் சுற்றி சுற்றி மாவை பிழிந்துவிடுங்கள்.

பின் எண்ணெய் அதன் மேல் கொஞ்சம் தூவி விட்டு பொன்னிறமாக வந்ததும் மறுபுறம் திருப்பிப் போடுங்கள்.

இப்படி இரண்டு புறங்களும் திருப்பி போட்ட பின் மொறு மொறுவென பொன்னிறமாக வெந்திருக்கும்.

அதை அப்படியே தட்டில் வைத்து சால்னா ஊற்றி சாப்பிட்டால் அப்படியே பரோட்டா சுவையில் இருக்கும்.

இதை வீட்டில் மறக்காமல் டிரை பண்ணி பாருங்க...

Published by:Sivaranjani E
First published:

Tags: Parotta