ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் எடையை குறைக்க விரதம் இருக்க வேண்டாம்.. இதை குறைங்க போதும்..!

உடல் எடையை குறைக்க விரதம் இருக்க வேண்டாம்.. இதை குறைங்க போதும்..!

டயட்

டயட்

உடல் எடை மாற்றங்களுக்கும், இடைப்பட்ட உண்ணாவிரத முறைகளுக்கும் இடையே ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என்பதை கண்டறியும் வகையில் அண்மையில் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் தடாலடியாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, அவ்வபோது விரதம் இருக்க தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக சிலர் 16 முதல் 18 மணி நேரம் வரையிலும் கூட உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ஆனால், விரதம் இருப்பதால் மட்டுமே உடல் எடை குறைந்து விடாது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகின்ற அதே சமயத்தில் உணவின் அளவை குறைத்துக் கொள்வது, கலோரிகளின் அளவை குறைப்பது போன்றவை பலன் தரக் கூடிய நடவடிக்கைகளாக அமைகின்றன.

உடல் எடையை குறைக்க சிலர் மிக கடினமான அளவில் உடற்பயிற்சி செய்கின்றனர். சிலர் பேலியோ, கீட்டோ போன்ற டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது பரவலாக பின்பற்றக் கூடிய முறையாக இருக்கிறது. ஆனால், பகல் பொழுதில் முழுவதுமாக உணவை தவிர்ப்பதன் மூலமாக உடல் எடையை மேலாண்மை செய்ய முடியும் என்பதற்கான உறுதிமிக்க ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை.

புதிய ஆய்வு : 

உடல் எடை மாற்றங்களுக்கும், இடைப்பட்ட உண்ணாவிரத முறைகளுக்கும் இடையே ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என்பதை கண்டறியும் வகையில் அண்மையில் புதிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்ட 550 பேர் பங்கேற்றனர். போட்டியாளர்களின் உடல் எடை மற்றும் உயரம் ஆகியவை கணக்கிடப்பட்டது.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரத்யேகமான ஸ்மார்ட்ஃபோன் ஆப் இன்ஸ்டால் செய்து கொடுக்கப்பட்டது. அந்த ஆப் மூலமாக, சாப்பிடுவது, தூங்குவது, தூங்கி எழுவது ஆகிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அப்டேட் செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக, தூங்கி எழுந்த சமயத்தில் இருந்து முதல் உணவு சாப்பிடும் நேரத்திற்கு இடையிலான இடைவெளி மற்றும் கடைசி உணவுக்கும், இரவு தூங்கும் சமயத்திற்கும் இடையிலான இடைவெளி போன்ற தகவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்த தகவல்களும் திரட்டப்பட்ட பிறகு, ஒரு சராசரி கணக்கு கணிக்கப்பட்டது.

Also Read : Zero Calories Food : சீக்கிரமே உடல் எடையை குறைக்கனுமா..? அப்போ கலோரிகளே இல்லாத இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..!

இறுதியாக ஒரு வேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையிலான நேரத்தை அதிகரிப்பதை காட்டிலும் கலோரிகளை குறைப்பதன் மூலமாக உடல் எடை குறைவது கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் புளூம்பெர்க் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாக்கின்ஸ் பொது சுகாதார மையத்தின் இணை ஆய்வாளர் டீ சாஹோ, இதுகுறித்துப் பேசுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் என்பது கணிப்புக்குரியவை தான். ஆகவே, கலோரி தொடர்பிலான நேரடி விளைவுகளை முழுமையாக சொல்லிவிட முடியாது’’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Diet, Intermittent Fasting, Low calorie food