Home /News /lifestyle /

சிவப்பு அரிசியில் இத்தனை நன்மைகள் இருக்கா..? உடல் எடையை குறைக்க கண்டிப்பா டிரை பண்ணுங்க..!

சிவப்பு அரிசியில் இத்தனை நன்மைகள் இருக்கா..? உடல் எடையை குறைக்க கண்டிப்பா டிரை பண்ணுங்க..!

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியில்  (Brown Rice) உள்ள கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

இன்றைக்கு மக்களிடையே உணவு முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தெரியாத பெயர்களில் உள்ள உணவுகளை வாங்கி நாம் சாப்பிட தொடங்கியதன் விளைவு தான் தற்போது புதிய புதிய நோய்களையும் நாம் சம்பாதித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று தாக்கத்திற்குப்பிறகு இதுப்போன்ற நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.

உடல் நலத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது? முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கியுள்ளனர். இப்படி உடல் நலத்திற்கான பயிற்சிகளை செய்வதோடு நல்ல உணவுமுறைகளையும் நாம் கையாள்வது முக்கியமான ஒன்று. அதில் ஒரு உணவு முறையைத்தான் இப்போது நாம் இன்றைக்குப் பார்க்கப்போகிறோம்..

பிரவுன் அரிசி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் பழுப்பு அல்லது சிவப்பு அரிசியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் என்கிற கெட்ட கொழுப்கைக்குறைக்கவும் உதவுவதால் டயட்டில் உள்ள பலர் இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.இதில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது எனக்கூறப்படுகிறது. இதோடு சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப்புற்றுநோய் வராமல் தாக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன. இப்படி பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள இந்த அரிசியை சமைப்பதற்கு நேரம் எடுக்கும். ஆனால் இதில் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. எனவே பிரவுன் அரியை வைத்து என்னென்ன ரெசிபிகள் செய்யலாம் என இங்கே தெரிந்துக்கொள்ளலாம்..

கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

சிவப்பு அரிசியில் செய்யப்படும் ரெசிபிக்களின் பட்டியல்:

சிவப்பு அரசி மற்றும் பருப்பு:

தேவையான பொருள்கள்:

சிவப்பு அரிசி – 1 கப்

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் சிவப்பு அரிசியை 3 அல்லது 4 முறை கழுவ வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கழுவிய அரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரத்திற்கு பிறகு அரிசி வெந்துவிடும். பின்னர் சிவப்பு சாதத்துடன் பருப்பு சேர்த்து பரிமாறலாம். இது உடல் நலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.சிவப்பு அரிசி புலாவ்:

தேவையானப் பொருட்கள்:

சிவப்பு அரிசி – 1 கப்

காய்கறிகள் – வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளை போன்றவற்றைச்சேர்க்கலாம் அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் தேவைக்கேற்ற

எண்ணெய் – 1 தேக்கரண்டி

ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, சீரகம், கிராம்ப மற்றும் மிளகு

இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி

இந்தியாவில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய 6 வகை அரிசிகள்... அவை என்னென்ன தெரியுமா..?

செய்முறை:

புலாவ் செய்வதற்கு முதலில் 1 கப் சிவப்பு அரிசியை 2 அல்லது 3 முறை கழுவவும். பின்னர் வெங்காயம், தக்காளி,கேரட், பீன்ஸ் போன்ற உங்களுக்குப்பிடித்தமானக் காய்கறிகளை வெட்டி வைத்துக்கொள்ளவும்.

இதனையடுத்து குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஏலக்காய், பட்டை, மிளகு போன்றவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, நறுக்கிய தக்காளி மற்றும் காய்கறிகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் கழுவிய அரிசியை அதனுடன் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்துவிட்டு குக்கரை மூட வேண்டும். முழுவதுமாக 3 விசில் வந்ததும் அடுப்பை ஆப் செய்து ஆவி போனதும் மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறலாம்…சிவப்பு அரிசியில் ப்ரைட் ரைஸ் ( Fried rice)

தேவையானப் பொருட்கள்:

சிவப்பு அரிசி – 1 கப்

காய்கறிகள் – விருப்பத்திற்கு ஏற்ப

தண்ணீர் தேவைக்கு ஏற்ப

எண்ணெய் – 1 தேக்கரண்டி

இஞ்சி மற்றும் பூண்டு

சோயா சாஸ் மற்றும் வினிகர்

செய்முறை:

முதலில் அரிசியைக்கழுவி நன்றாக வேக வைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். பின்னர் காய்கறிகளைச்சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் வேக வைத்த அரிசியைச் சேர்த்து காய்கறிகளுடன் நன்கு கலக்கவும். பின்னர் கொத்தமல்லி அல்லது புதினாவுடன் சேர்த்து சூடாக பரிமாறலாம்.

மேற்கண்ட ரெசிபிகள் மட்டுமில்லாது, சிவப்பு அரிசியில் புட்டு, கொழுக்கட்டை, இடியாப்பம் போன்றவற்றையும் செய்து குழந்தைகளுக்குக்கொடுக்கலாம். நிச்சயம் இது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Rice benefits, Weight loss

அடுத்த செய்தி