Home /News /lifestyle /

ஹிமாலயன் உணவு வகைகள் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசியமான விஷயங்கள்..!

ஹிமாலயன் உணவு வகைகள் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசியமான விஷயங்கள்..!

ஹிமாலயன் உணவு வகைகள்

ஹிமாலயன் உணவு வகைகள்

ஹிமாச்சல பிரதேசத்தின் மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான வானிலையை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் 'ஹிமாலயன்' உணவு வகைகள் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கும்

இந்தியா - ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு மற்றும் பல கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் உணவு வகைகளின் தாயகம் ஆகும். இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் கிடைக்கும் ஒவ்வொரு உணவும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது மற்றும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டது. இந்திய உணவு வகைகள் ஒவ்வொன்றும் பல ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்டு வருகின்றன மற்றும் உணவை சமைப்பவர்களின் இருப்பிடம் மற்றும் நிலப்பரப்பு உள்ளிட்ட பல காரணங்கள், அந்த உணவின் மீதான சிறப்பை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கின்றன.

அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு 'ஹிமாலயன்' உணவு வகைகளாகும் ஹிமாச்சல பிரதேசத்தின் மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான வானிலையை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் 'ஹிமாலயன்' உணவு வகைகள் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கும், எத்தனை சிறப்பானதாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். மிகவும் பிரபலமான ஆனால் பெரிதும் கொண்டாடப்படாத 'ஹிமாலயன்' உணவு வகைகளைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள் இதோ.

நீங்கள் எப்போதாவது ஹிமாலயன் உணவை ருசித்து, அது ஏன் காரமாக இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா? ஏனென்றால் மசாலாப் பொருட்களின் பயன்பாடு உணவை ஜீரணிக்க கடினமாக்குகிறது. மிகவும் கடுமையான சூழ்நிலைகள் மற்றும் பாறை நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு 'ஹெவி' ஆன மற்றும் 'ஸ்பைசி' ஆன உணவுகளை ஜீரணிக்க முடியவில்லை என்றால் அது அவர்களுக்கு கவலைக்குரிய ஒரு விடயமாகி விடும்.



மேலும் இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் புளித்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவார்கள், ஏனெனில் இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் சாப்பிட்ட உணவை விரைவாக செரிமானமாக்கவும் உதவுகிறது.

அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!

இமயமலையில் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களில் அதிக புரோட்டீன் சத்துக்களும் உள்ளது, அதோடு கார்போஹைட்ரேட்டுகளும், கொழுப்புகளும் உள்ளன. இத்தகைய சத்துக்களை கொண்ட உணவு, தீவிரமான வானிலைகளிலும் மக்கள் தத்தம் அன்றாட வேலைகளை முன்னெடுத்து செல்ல உதவுகிறது. கடுமையான காலநிலையைச் சமாளிக்கவும், இடைவிடாமல் வேலை செய்யவும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

இமயமலையில் உண்ணப்படும் உணவுப் பொருட்கள், அங்கு நிலவும் கடுமையான மற்றும் தீவிரமான குளிர்கால சூழ்நிலைகளை சமாளிக்க உதவுவதோடு நில்லாமல், உண்பவர்களுக்கு ஊட்டமளிக்கவும் தவறுவதில்லை.



சுவாரசியமான விடயம் என்னவென்றால், இமயமலையில் குறிப்பிட்ட 'வின்டர் மெனு' என்று எதுவும் இல்லை. ஏனெனில் அங்கே பெரும்பாலான உணவுப் பொருட்கள் பனி இல்லாத நாட்களில் தான் வளர்க்கப்படுகின்றன, பின்னர் அவைகள் சேமிக்கப்பட்டு தேவையான காலங்களில் உட்கொள்ளப்படுகின்றன. பூமிக்கடியில் விளையும், அதாவது வேர்களை கொண்ட காய்கறிகள் (Root Vegetables) போன்ற சில உணவுப் பொருட்கள் ஒரு குழிக்குள் சேமிக்கப்பட்டு உலர்ந்த இலைகளால் மூடப்படும். இவ்வழியில் தான் ஹிமாச்சல பிரதேசத்தில் வாழும் மக்கள் பனியிலிருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food

அடுத்த செய்தி