ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எலுமிச்சை சுவையில் பனீர் மசாலா செய்ய ரெசிபி.. டின்னருக்கு பொருத்தமாக இருக்கும்..!

எலுமிச்சை சுவையில் பனீர் மசாலா செய்ய ரெசிபி.. டின்னருக்கு பொருத்தமாக இருக்கும்..!

பனீர் மசாலா

பனீர் மசாலா

மசாலா கலந்து காரசார சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பனீரில் எலுமிச்சையை பிழிந்து விட்டு அதன் புளிப்பு சுவையில் சாப்பிடுவதே தனி சுவை. அதை மசாலா கலந்து காரசார சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 200 கிராம்

பட்டர் - 2 tsp

குடை மிளகாய் - 1/2 கப்

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1/2 கப்

பூண்டு - 8

பச்சை மிளகாய் - 3

உப்பு - தே.அ

மிளகுப் பொடி - 1 tsp

மஞ்சள் பொடி - 1 tsp

கிரீன் சில்லி சாஸ் - 1 tsp

டொமேட்டோ சாஸ்

கருவேப்பிலை - 1 கொத்து

கடுகு - 1 tsp

சோள மாவு - 1 tsp

எலுமிச்சை - 1

செய்முறை :

கடாய் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் கடுகு சேர்த்து பொறிக்க விடுங்கள்.

பின் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

கன்ணாடி பதம் வந்ததும் குடை மிளகாயை சேர்க்கவும்.

பின் மஞ்சள், கிரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பனீர் சேர்த்து வதக்கவும்.

காரசாரமான சின்ன வெங்காய தொக்கு... சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி..!

உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பின் சோள மாவை தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறுங்கள்.

கெட்டிப்பதம் வரும்போது எலுமிச்சை சாறை ஊற்றி பிரட்டிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

அவ்வளவுதான் எலுமிச்சை சுவையில் பனீர் மசாலா தயார்.

First published:

Tags: Lemon, Paneer