• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அமெரிக்காவில் அடை தோசை... குக்கிங்கில் பிஸியான லட்சுமி ராமகிருஷ்ணன்!

அமெரிக்காவில் அடை தோசை... குக்கிங்கில் பிஸியான லட்சுமி ராமகிருஷ்ணன்!

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

அமெரிக்காவில் இருந்தப்படியே தனது குக்கிங் திறமைகளை யூடியூப் வீடியோவில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

  • Share this:
    அமெரிக்காவில் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் யூடியூப் ஸ்பெஷலாக அவரே செய்த தக்காளி அடை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம்.

    லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றியே அறிமுகமே தேவையில்லை. வெள்ளித்திரையில் பல படங்களிலும் துணை நடிகையாக நடித்தவர் சில படங்களை இயக்கியுள்ளார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் இவரின் புகழ் பரவியது. இந்த நிகழ்ச்சியால் இவர் சந்தித்த சர்ச்சைகளும் ஏராளம். இருப்பினும் தனக்கு பிடித்ததை தைரியமாக செய்யக்கூடியவர். இவரின் மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.

    அதில் மூத்த மகளுக்கு திருமணமாகி அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் மகளை பார்ப்பதற்கு அண்மையில் தனது கணவருடன்  அமெரிக்கா சென்றவர் யூடியூப் சேனல் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். படங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்தப்படியே தனது குக்கிங் திறமைகளை யூடியூப் வீடியோவில் வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய ஸ்பெஷல் லட்சுமி ராமகிருஷ்ணனின் தக்காளி அடை தோசை.



    இதை செய்ய தேவையான பொருட்கள், 1 கப் பச்சரி, 1 கப் புழுங்கல் அரிசி, தக்காளி, புதினா, தேங்காய், கறிவேப்பிலை. முதலில் ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்பு அதில் 3 அல்லது 4 தக்காளியை சேர்த்து அடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம் போல் தவாவில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மாவை தோசை போல் ஊற்றி அதன் மேல் தேங்காய் துருவல், புதினா, கறிவேப்பிலை சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான தக்காளி அடை தோசை ரெடி.

    இந்த மாவை இன்று அரைத்தால் ஒருநாள் ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அதன் பிறகு பயன்படுத்தக்கூடாது என்பது மிக முக்கியமான குறிப்பு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: