• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வெண்டைக்காய் பச்சடியை இப்படி செஞ்சு கொடுங்க!

வெண்டைக்காய் பச்சடியை இப்படி செஞ்சு கொடுங்க!

வெண்டைக்காய் பச்சடி

வெண்டைக்காய் பச்சடி

வெண்டைக்காய் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதே போல் அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோயின் அபாயம் குறைகிறது.

  • Share this:
    உங்கள் உணவில் வெண்டைக்காயை சேர்ப்பதன் மூலம், புற்றுநோயை விரட்டலாம். குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோயை அகற்ற வெண்டைக்காய் மிகவும் நன்மை பயக்கும். இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இதன் காரணமாக குடல்கள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் சிறப்பாக செயல்படுகின்றன. அத்தகைய வெண்டைக்காயில் பச்சடி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

    தேவையான பொருள்கள்

    வெண்டைக்காய் - 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க

    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி

    தக்காளி -1

    பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)

    சீரகம் - 2 மேஜைக்கரண்டி

    சின்ன வெங்காயம் - 3

    தாளிக்க

    கடுகு - 1 தேக்கரண்டி

    சின்ன வெங்காயம் - 3

    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    வெண்டைக்காய் பச்சடி


    செய்முறை

    வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறிக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை வதக்கவும்.
    பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும். வெண்டைக்காய் பச்சடி ரெடி.

    மேலும் படிக்க... சுவையான அவியல் செய்ய ரெசிபி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: