முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம்... செஞ்சு சாப்புட்டு பாருங்க... சூப்பராக இருக்கும்...

குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம்... செஞ்சு சாப்புட்டு பாருங்க... சூப்பராக இருக்கும்...

kuthiraivaali curd rice | குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

kuthiraivaali curd rice | குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

kuthiraivaali curd rice | குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

  • Last Updated :

குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. அத்தகைய குதிரைவாலியில் தயிர் சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி - 500 கிராம்

பால் -ஒரு கோப்பை

தயிர் -அரை கோப்பை

உப்பு -தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை,

கடுகு -1 டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

மாதுளை, இஞ்சி - சிறிதளவு.

குதிரைவாலி அரிசி

செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். பின் சோறு குளிர்ந்த பிறகு, அதனுடன் பால் சேர்த்து கிளறவும். பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு. காய்ந்த மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும். பின் அதை தயிருடன் சேர்த்து, பால் ஊற்றி சாதத்தில் போட்டு நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி, மாதுளை சேர்த்துப் பரிமாறவும். மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க... சிவப்பரிசிப் பணியாரம் செய்வது எப்படி?

First published:

Tags: Millets Food