• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தித்திப்பான திரட்டுப் பால் செய்வது எப்படி...?

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தித்திப்பான திரட்டுப் பால் செய்வது எப்படி...?

 திரட்டுப் பால்

திரட்டுப் பால்

மிகவும் சுலபமாக செய்யக்கூடியது திரட்டு பால்...

  • Share this:
    நாளை கோகுலாஷ்டமி கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் கிருஷ்ணருக்குப் பிடித்த பலகாரங்களை படைத்து கிருஷ்ணரை வணங்கி அவரின் அருளைப் பெறலாம். கிருஷ்ணருக்கான படையலில் வைக்கும் இனிப்புகள் ஏறாலம். அவற்றில் திரட்டுப் பால் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் அவாங்க... 

    தேவையான பொருட்கள்:

    பால் – ஒரு லிட்டர்

    வெள்ளம் – 300 கிராம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

    ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன்

    நெய் – அரை ஸ்பூன்

    முந்திரிபருப்பு – 10



    செய்முறை:

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். அதனை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

    பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரையை (வெல்லம்) போட்டு நன்றாக கலக்கவும். சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.  திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும். அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும். இப்போது தித்திப்பான திரட்டிப்பால் ரெடி....

    குறிப்பு :

    பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம். திரட்டுப்பால் செய்யும் போது அடிக்கடி பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    மேலும் படிக்க.... இட்லி மாவை வைத்து சுவையான ஜிலேபி செய்யலாம்... 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: