கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... உப்பு சீடை ரெசிபி...

கார சீடை ரெசிபி

கிருஷ்ண ஜெயந்திக்கு உப்பு சீடை செய்வது வழக்கம். இதனை செய்வது மிகவும் சுலபமானது. வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • Share this:
இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பல பலகாரங்களை வீட்டில் செய்து, வழிபாடு செய்வதை கிருஷ்ண பக்தர்கள் வழக்கமாக  கொண்டுள்ளனர். அந்த வகையில் கிருஷ்ணருக்கு பிடித்த சீடை எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி – 300 கிராம்

பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன்

ஓமம் – அரை டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

அரைத்த சிவப்பு மிளகாய் விழுது அல்லது பொடித்த மிளகு- ஒரு டீஸ்பூன் இனிப்பாக வேண்டும் என்றால் கருப்பு வெல்லம் - 1 கப்

தேங்காய்த் துருவல் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சீடை


செய்முறை: 

பச்சரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் காய வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், பெருங்காயத்தைப் பொடித்து 50 மில்லி நீர்விட்டுக் கரைத்துவைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, பச்சரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிளகுத்தூள் (அ) மிளகாய் விழுது, உப்பு, ஓமம், எள், வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும், பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிறகு, அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் ஓமம் – உப்பு சீடை ரெடி...

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி...
Published by:Vaijayanthi S
First published: