ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | கோவில் பிரசாதம் ஸ்டைலில் வெண் பொங்கல் செய்யனுமா? ரகசியம் இதுதான்!

Pongal Recipe 2023 | கோவில் பிரசாதம் ஸ்டைலில் வெண் பொங்கல் செய்யனுமா? ரகசியம் இதுதான்!

வெண் பொங்கல்

வெண் பொங்கல்

பொங்கல் செய்ய ஆரம்பிக்கும் முன் சுடு தண்ணீரில் கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் வரப்போகிறது. பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் வெண் பொங்கலை வீட்டிலிருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள்.. ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்.. ரெசிபி கீழே.!

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் ( துருவியது )

கட்டிப் பெருங்காயம் - 1 கட்டி

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

முந்திரி - தேவைக்கேற்ப

உப்பு - சிறிதளவு

நெய் - 6 முதல் 8 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

 • பொங்கல் செய்ய ஆரம்பிக்கும் முன் சுடு தண்ணீரில் கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
 • அடுப்பில் குக்கரை வைத்து முதலில் பாசிப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வருத்துக் கொள்ளவும்.
 • அதன்பின்னர் அடுப்பை அனைத்து விட்டு அந்த குக்கர் சூட்டிலேயே அரிசியை சேர்த்து சிறிது சூடேறும் வரையில் மட்டும் வறுத்துக் கொள்ளுங்கள்.

 • அதன்பின்னர் அரிசி பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து 5 1/2 கப் தண்ணீர் ஊற்றிய பின்னர் ஊற வைத்த கட்டிப் பெருங்காய தண்ணீரில் இருந்து இரண்டு டீஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நெய் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து விசில் வீட்டு இரக்கலாம்.
 • குக்கரை திறந்ததும் சிறிது கரண்டியை வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதன் பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி மீதி உள்ள நெய்யையும் ஊற்றிக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து கொள்ளுங்கள்.
 • நெய் உருகியதும் மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து பொந்நிறமாகும் வரையில் பொரிய விடுங்கள். அதன்பின்னர் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். அதன்பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் மீதி இருக்கும் பெருங்காயத் தண்ணீரை சேர்த்து அடுப்பை அனைத்து விட்டு 2 நிமிடம் மூடி வையுங்கள்.
 • இறுதியாக தாளித்ததை குக்கரில் வெந்த சாதம், பருப்புடன் சேர்த்து கிளறினால் கோவில் ஸ்டைல் வெண் பொங்கல் தயார்!
 • குறிப்பு : முடிந்த வரையில் கட்டிப்பெருங்காயத்தை உபயோகப் படுத்த பாருங்கள். அதுதான் கோவில் பிரசாத சுவையை கொடுக்கக் கூடிய முக்கிய பொருள் ஆகும்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal recipes