Home /News /lifestyle /

கொத்தவரங்காய் பொரியல் செய்ய ரெசிபி இதோ....

கொத்தவரங்காய் பொரியல் செய்ய ரெசிபி இதோ....

கொத்தவராங்காய் பொரியல்

கொத்தவராங்காய் பொரியல்

kothavarangai | கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.

கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும் புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். இந்த காயில் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொத்தவரங்காய் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

மஞ்சள்தூள் - 1/4டேபிள்ஸ்பூன்

சிறிதளவு தேங்காய் துருவல்

தேவையான அளவு உப்பு

பூண்டு - 4 பல்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டேபிள்ஸ்பூன்

1 கொத்து கருவேப்பிலை

கொத்தவரங்காய் பொரியல்


செய்முறை

முதலில் கொத்தவரங்காயை சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கொத்தவரங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சட்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

மேலும் படிக்க... கோவக்காய் பிரட்டல் செய்வது எப்படி?

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு 4 பல் இடித்த பூண்டு சேர்த்து நன்றாக கிளறி தேங்காய் துருவலை சேர்த்து இறக்கினால் கொத்தவரங்காய் பொரியல் ரெடி.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food

அடுத்த செய்தி