கொத்தமல்லி சட்னி வீட்டில் அரைப்பது வழக்கமான ஒன்று தான். கொத்தமல்லியுடன் தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம் அல்லது புதினா, கொத்தமல்லி சேர்த்தும் சட்னி செய்யலாம். இந்த இரண்டு காம்போவும் இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும். இது வீட்டுக்கு ஓகே. ஆனால் ஹோட்டலில் ஒரே மாதிரியான கொத்தமல்லி சட்னியை தினமும் பரிமாற முடியாது. அதனால் கொத்தமல்லி சேர்த்து பலவகையான சட்னிகளை மாஸ்டர்கள் ட்ரை செய்வார்கள். அதில் ஒன்று தான் இந்த தக்காளி - கொத்தமல்லி சட்னி. பெரும்பாலும் நம் வீடுகளில் தக்களியுடன் சேர்த்து கொத்தமல்லி சட்னி செய்ய மாட்டோம்.
ஆனால் செய்தால் டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இதுவரை இந்த மாதிரி கொத்தமல்லி சட்னி ட்ரை செய்யாதவர்களும் கண்டிப்பாக இதை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபி வீடியோ ’அன்னை சமையல்’ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகையான கொத்தமல்லி சட்னி ஹோட்டல் ருசியில் இருக்கும். இட்லி தோசையை தாண்டி துவையல் போல் ரசம் சாதம், தயிர் சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
கல்யாண வீட்டு வத்தக்குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், தேங்காய், தக்காளி, புளி, எண்ணெய், உப்பு, புளி, கடுகு, உளுத்தம் பருப்பு.
செய்முறை:
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு அதே கடாயில் சிறிதளவு உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
3. இப்போது நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. இத்துடன் சிறிதளவு, உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.
ஒருமுறை கார சட்னி இப்படி செய்து பாருங்கள்.. வீட்டில் இருப்பவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!
5. கடைசியாக ஒரு கை பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
6. பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
7. அவ்வளவு தான் கடைசியாக கடுகு சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் அருமையான தக்காளி கொத்தமல்லி சட்னி தயார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.