ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரியன் எக் டிராப் சூப் கேள்விப்பட்டிருக்கீங்களா..? ரொம்ப ஈஸியா ரெடி பண்ணிடலாம்!

கொரியன் எக் டிராப் சூப் கேள்விப்பட்டிருக்கீங்களா..? ரொம்ப ஈஸியா ரெடி பண்ணிடலாம்!

கொரியன் எக் டிராப் சூப்

கொரியன் எக் டிராப் சூப்

கொரியன் எக் டிராப் சூப் ஒரு சுலபமாக செய்யக்கூடிய சூப்பாகும். இதை வெறும் 15 நிமிடங்களுக்குள் தயார் செய்து அசத்தி விடலாம். ஸ்டாக், முட்டை மற்றும் சோயா சாஸ் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் ரெசிபியை சமையலுக்கு புதிதானவர்கள் கூட செய்து விடலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உணவு என்றாலே கண்கள் இரண்டும் விரிந்து, நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு பல உணவு பிரியர்கள் இங்கு உள்ளனர். இது எல்லா வகையான உணவுகளுக்கும் பொருந்தும் என்றாலும், சில ஸ்பெஷல் வகை உணவுகளின் பட்டியலை கேட்டாலே உற்சாகமாக கூடிய நபர்கள் அதிகம் உண்டு.

இந்த வகை உணவுகளில் கொரிய நாட்டு உணவுகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எப்படி கொரிய நாட்டு படங்கள், சீரிஸ், பியூட்டி புராடக்ட்ஸ் போன்றவற்றை அதிக பேர் விரும்புகிறார்களோ அதே போன்று, கொரிய நாட்டு உணவிற்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

அந்த வகையில், நீங்கள் கொரிய உணவு வகைகளின் ரசிகராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த புதிய சூப் வகை பிடிக்கும். கொரியன் எக் டிராப் சூப் ஒரு சுலபமாக செய்யக்கூடிய சூப்பாகும். இதை வெறும் 15 நிமிடங்களுக்குள் தயார் செய்து அசத்தி விடலாம். ஸ்டாக், முட்டை மற்றும் சோயா சாஸ் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் ரெசிபியை சமையலுக்கு புதிதானவர்கள் கூட செய்து விடலாம். நூடுல்ஸ், ரைஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான சைட் டிஷ் ஆகியவற்றுடன் இந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.

இந்த சூப்பில் வெங்காயத்தை சேர்ப்பதனால், இறுதியில், முட்டையின் சுவையை நிறைவு செய்யும்போது சூப்பில் ஒரு மொறுமொறுப்பான அமைப்பைச் சேர்க்கிறது. இந்த பிரபலமான கொரியன் சூப் செய்முறை பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

கொரியன் எக் டிராப் சூப் செய்வதற்கு சில முக்கிய பொருட்கள் தேவை.

3 கப் - வெஜ் ஸ்டாக் (ஸ்டாக் என்பது சிக்கன்/மட்டன் எலும்பு கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு என்று அழைக்கப்படுகிறது)

1/2 டீஸ்பூன் - உப்பு

1 - வெங்காயம்

3 - முட்டை

1 டேபிள்ஸ்பூன் - சோயா சாஸ்

கொரியன் எக் டிராப் சூப் செய்வது எப்படி?

இந்த சூப்பை தயார் செய்வதற்கு முதலில் வெஜ் ஸ்டாக்கை வேகவைக்கவும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் வேக வைத்த ஸ்டாக், சோயா சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். இவற்றை சிறிது கொதிக்க விடவும். இதற்கிடையில், 2 முட்டைகளை ஒரு கிண்ணத்தில் அடித்து எடுத்து கொள்ளவும்.

வேக வைத்த ஸ்டாக் ஒரு கொதி வந்ததும், அடித்த முட்டைகளை ஸ்டாக் கொதித்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் ஊற்றவும். முட்டைகளை உடைக்க மெதுவாக கிளறி விடுங்கள். இந்த செய்முறையில் போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

Also Read : நறுமணமான நண்டு சூப் செய்வது எப்படி?

முட்டை துண்டு துண்டுகளாக வந்தபின் வெந்ததும், ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். பிறகு, நறுக்கிய பச்சை வெங்காயத்தால் அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவு தான், உங்களுக்கான கொரியன் எக் டிராப் சூப் தயாராகி விட்டது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Food recipes, Low calorie food, Soup