கொங்கு நாடு சிக்கன் ஃப்ரை இப்படிதான் இருக்கனும்... ரெசிபி...

கொங்கு நாடு சிக்கன் ஃப்ரை

கொங்கு மண்டல பகுதிகளில் பிரபலமாக உள்ள பள்ளிபாளையம் சிக்கனும் ஒன்று. தனித்துவமான டேஸ்ட்யை கொண்டுள்ள இந்த சிக்கன் வெரைட்டியை தயார் செய்ய அதிக நேரம் தேவையில்லை. மேலும் இதற்கான செய்முறையும் ரெம்ப ஈஸியாகும்.

 • Share this:
  தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாச வித்தியாசமான முறையில் சமையல் செய்யப்படுகின்றன. அவற்றில் அசைவம் பலவிதமான முறையில் செய்யப்படுகின்றன. இதில் சிக்கன் நாம் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய அசைவ உணவு. இவற்றில் சிக்கன் ப்ரைகளும், கிரேவிகளும் அடங்கும்.

  அந்த வகையில் கொங்கு மண்டல பகுதிகளில் பிரபலமாக உள்ள பள்ளிபாளையம் சிக்கனும் ஒன்று. தனித்துவமான டேஸ்ட்யை கொண்டுள்ள இந்த சிக்கன் வெரைட்டியை தயார் செய்ய அதிக நேரம் தேவையில்லை. மேலும் இதற்கான செய்முறையும் ரெம்ப ஈஸியாகும்.

  தேவையான பொருட்கள்

  சிக்கன் – 350 கிராம்

  மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

  நறுக்கிய தேங்காய்

  காய்ந்த மிளகாய் – 15

  பூண்டு – 15

  இஞ்சி – சிறிய துண்டு

  எண்ணெய் – 40 மில்லி

  கடுகு – 1/4 தேக்கரண்டி

  உளுந்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி

  கருவேப்பிலை – 1 கொத்து

  சின்ன வெங்காயம் – 200 கிராம்

  கொங்கு நாடு சிக்கன் ஃப்ரை


  செய்முறை

  முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தனியாக ஊற வைக்கவும். அதன் பின்னர் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை,  காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொறிக்கவிடவும். பிறகு அவற்றோடு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  மேலும் படிக்க...கொங்கு ஸ்டைலில் மீன் வறுவல்... ரெசிபி இதோ..

  அதனை தொடர்ந்து இஞ்சி பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். இதனை தட்டிதான் போட வேண்டும். அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து அவை நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை கிளற வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை அவற்றோடு சேர்த்து, தண்ணீரைத் தெளித்து வேக வைக்கவும். தண்ணீரை ஊற்றக்கூடாது. பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக ரோஸ்ட் போல கிளறிவிட வேண்டும். எந்த அளவிற்கு நாம் ரோஸ்ட் செய்கிறோமே அந்த அளவிற்கு நமக்கான டேஸ்ட் கிடைக்கும். இது காரம் அவ்வளவாக இருக்காது. அதனால்  குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
  Published by:Vaijayanthi S
  First published: