ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொள்ளு பொடி செய்முறை!

கொள்ளு பொடி செய்முறை!

கொள்ளு பொடி

கொள்ளு பொடி

இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், பொடி குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள்  உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொள்ளை சுண்டல் செய்து சாப்பிடுவார்கள். கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இட்லி பொடி போல பொடித்து வைக்க கொள்ளு பொடியை எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1/4 கப்

பூண்டு -4-5

கருவேப்பிலை -1 கப்

உப்பு தேவைக்கேற்ப

பெருங்காயம் தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 10-15

செய்முறை

முதலில் கடாயில் மூன்று பருப்பையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாய், கருவேப்பிலையை வறுத்து எல்லாவற்றையும் நன்றாக ஆறிய பின்பு உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை இட்லி தோசையுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரிமாறலாம்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Food