முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை குறைக்கும் சத்தான கொள்ளு சாதம் செய்ய ரெசிபி...

உடல் எடையை குறைக்கும் சத்தான கொள்ளு சாதம் செய்ய ரெசிபி...

கொள்ளு சாதம்

கொள்ளு சாதம்

hourse gram | கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்,

சீரகச் சம்பா அரிசி அல்லது வேறு ஏதானும் ஒரு அரிசி -1 கப்,

பெரிய வெங்காயம் -1,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - 2,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - 1 தேக்கரண்டி,

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,

உப்பு - தேவைக்கேற்ப,

நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

முதலில் கொள்ளுவை வேக விடவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீரகச்சம்பா அல்லது வேறு அரிசியை உதிரியாக வேக விடவும், பின் ஆற வைக்கவும். வாணலியில் நெய் 1 தேக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

மேலும் படிக்க... குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம்... செஞ்சு சாப்புட்டு பாருங்க...

top videos

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள்,  மல்லித்தூள்,  சீரகத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெந்த கொள்ளுவை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் ஆறிய சாதம் சேர்த்து கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். இப்போது கொள்ளு சாதம் ரெடி..

    First published:

    Tags: Millets Food, Rice