ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காரசாரமான கர்நாடக சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.!

காரசாரமான கர்நாடக சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.!

கோலார் சட்னி

கோலார் சட்னி

இந்த சட்னியை 10 நிமிடத்தில் வதக்கி அரைத்து விடலாம். இட்லி, தோசை, ஊத்தாப்பம் மட்டுமல்லாது பொடி தோசைக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக அமையும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலை உணவு என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் அடிக்கடி செய்வது இட்லி, தோசை தான். அதற்கு பெரும்பாலும் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது தக்காளி சட்னி தான் மாற்றி மாற்றி செய்து சாப்பிடுமாறு இருக்கும். அப்படி இதே சட்னிகளை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த கர்நாடக சட்னி கண்டிப்பாக பிடிக்கும்.

இதை செய்ய தக்காளியை தவிர எதையுமே நறுக்க தேவை இருக்காது. சட்டுனு சுவையான கோலார் சட்னி என்றழைக்கப்படும் கர்நாடக ஸ்பெஷல் சட்னியின் சிம்பிள் ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

வேர்கடலை 1 கப்

பூண்டு - 20 பல்

வரமிளகாய் - 10

சீரகம் -1 டீஸ்பூன்

தக்காளி - 1

கறிவேப்பிளை

புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய்

கடுகு

சீரகம்

வரமிளகாய்

கறிவேப்பிலை

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, வேர்கடலை, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள். பாதி வறுபட்டதும் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளுங்கள். நன்கு ஆறிய பின்னர் மிக்ஸியல் போட்டு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்த பிறகு தாளித்தால் கர்நாடகா சட்னி ரெடி!

இந்த சட்னியை 10 நிமிடத்தில் வதக்கி அரைத்து விடலாம். இட்லி, தோசை, ஊத்தாப்பம் மட்டுமல்லாது பொடி தோசைக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக அமையும்.

First published:

Tags: Breakfast, Chutney, Food recipes