ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெறும் கடுகு பயன்படுத்தி சட்னியா..? கேட்கவே புதுசா இருக்குல... நீங்களும் டிரை பண்ணி பாருங்க...

வெறும் கடுகு பயன்படுத்தி சட்னியா..? கேட்கவே புதுசா இருக்குல... நீங்களும் டிரை பண்ணி பாருங்க...

கடுகு சட்னி

கடுகு சட்னி

எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு இன்று கடுகு சட்னி செய்து வைத்துப்பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடுகு என்பது தாளிக்க மட்டும்தான் பயன்படுத்துவோம். சில வகை உணவுகளில் கடுகு பேஸ்ட் கூட பயன்படுத்தக் கூடும். ஆனால் அதை வைத்து சட்னி அரைக்கலாம் என்பது புதுவிதமான டிஷ்தான். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு இன்று கடுகு சட்னி செய்து வைத்துப்பாருங்கள். அவர்கள் கண்கள் விரிய மகிழ்ச்சியோடு சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கடுகு - 3 tbsp

காய்ந்த மிளகாய் - 6

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 4 பற்கள்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

துருவிய தேங்காய் - 4 tbsp

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் கடாய் வைத்து கடுகை போட்டு நன்கு பொரிய வறுத்து எடுத்துக்கொள்ங்கள்.

பின் அதே கடாயில் மிளகாய் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இவை மூன்றும் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரையுங்கள்.

கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

கடுகு கசப்பு தெரிந்தால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் எப்போதும்போல் சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி தாளித்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் கடுகு சட்னி தயார்.

First published:

Tags: Chutney, Dinner Recipes