Home /News /lifestyle /

World Milk Day 2022 : பாலுக்கு பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கா... ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்..!

World Milk Day 2022 : பாலுக்கு பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கா... ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்..!

உலக பால் தினம் 2022

உலக பால் தினம் 2022

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளைக் கருப்பொருளாகக் கொண்டு பாலை பெரும்பாலான மக்களிடம் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ‘பால் நிகர சுழியம்’ என்ற மந்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.

  முழு உணவான பால் கிடைக்காமல் உலகில் சராசரியாக 1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகளாவிய உணவாக பாலை மாற்ற ஐக்கிய நாடுகள் எடுத்த முதற்படி.

  உலகில் உள்ள விலங்குகள், மனித இனங்கள் எல்லாம் பிறந்தவுடன் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவு என்றால் அது பால் தான். உலகத்தில் உள்ள பஞ்சத்தையும் பசியையும் போக்க அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் கையில் எடுக்கும் முதல் ஆயுதமும் பால் தான். அந்த பாலின் பண்புகளையும் உற்பத்தியையும் பெருக்க உருவாக்கப்பட்டதே உலக பால் தினம்.

  பால் தினம் உருவான கதை:

  ரோமைத் தலையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனமான ‘உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு’ (FAO). 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பால் ஒரு ஆடம்பரப் பொருளாகவே நிலவி வந்தது. அதை உலகளாவிய உணவாக மாற்றவும், பாலின் உற்பத்தியைப் பெருக்கவும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிகளை உருவாக்கவும் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1ஐ உலக பால் தினமாக அறிவித்தது.

  கருப்பொருள்

  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளைக் கருப்பொருளாகக் கொண்டு பாலை பெரும்பாலான மக்களிடம் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ‘பால் நிகர சுழியம்’ என்ற மந்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. உயர்ந்து வரும் புவிவெப்பமயதலாதலில் பால்துறையில் இருந்து வெளிவரும் பசுமை இல்ல வாயுகளையும்(green house gas) குப்பைகளையும் 30 ஆண்டுகளுக்குள் முடிந்த அளவு குறைக்கும் இலக்கை கொண்டுள்ளது.  பால் பேரணி:

  தேசிய விவசாய இளைஞர்கள் கூட்டமைப்பின் மூலம் பண்ணை விவசாயிகளுக்காக மே 27 முதல் 31 வரை ஒரு பேரணியை நிகழ்த்தியுள்ளது. #worldmilkday மூலம் பால் பண்ணை விவசாயிகளை பாராட்டவும் கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

  Global Day Of Parents : 2022-ஆம் ஆண்டு பெற்றோர்களான தமிழ் சினிமா பிரபலங்கள்..

  பால் : ஒரு முழு உணவு

  மனித இனம், நாகரிகம் அடையும்போதே அதனுடன் வளர்ந்தது இந்த பால் பழக்கம். பசு மட்டுமின்றி ஆடு , கழுதை, ஒட்டகம் என்று பல விலங்குகளின் பாலை உட்கொள்ள கற்றுக்கொண்டனர். ஆனால் பெரும்பாலும் மாட்டின் பால் தான் உலக அரங்கில் பெரிதும் நுகரப்படுகிறது. பால் அதே உருவில் மட்டுமின்றி, தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ், மில்க்சேக் என்று பல வடிவங்களில் எடுத்துக்கொள்கிறோம். சீனாவில் பழங்காலத்தில் மருந்தாக பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.  கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், போலேட் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துகளைக் கொண்டுள்ள பால் தனித்த முழு உணவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது இதய நோய்களை குறைக்கும் தன்மை கொண்டது.
  குழந்தைகளுக்கு சத்துப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க குறைந்தபட்சம் பாலாவது குடிக்க வேண்டும். ஆனால் , இந்த உலகில் சராசரியாக 1 பில்லியன் மக்கள் பால் கிடைக்காமல் வாழ்கின்றனர்.

  பால் ஏற்றுமதி நாடு:

  இந்தியாவில் 1960 களில் ஏற்பட்ட பெரும் பால் தட்டுப்பட்டின் போது அரசாங்கம் 'ஆப்பரேஷன் பிளட்' ஐத் தொடங்கியது. அந்த சமயத்தில் கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியன் ஏற்படுத்திய பால் புரட்சியால் 60 ஆண்டுகளில் பால்வளத்தில் தன்னிறைவு அடைந்ததோடு உலகின் மிகப்பெரும் பால் ஏற்றுமதி நாடாக விளங்குகிறது.பால் பொட்ருட்கள் சேமிப்பிற்காக கோல்டு செயின் உட்கட்டமைகளையும் மேம்படுத்தியுள்ளது.

  பால் தினத்தில் பாலில் என்ன செய்து சாப்பிடீர்கள்…?

   

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Milk

  அடுத்த செய்தி