Home /News /lifestyle /

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பூண்டு பால்..! சளி, மலச்சிக்கல் பிரச்னைகளுக்கும் குடிக்கலாம்..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பூண்டு பால்..! சளி, மலச்சிக்கல் பிரச்னைகளுக்கும் குடிக்கலாம்..!

 பூண்டு பால்

பூண்டு பால்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தூங்கும் முன் இந்த பாலை ஒரு கிளாஸ் குடுத்தால் சீக்கிரமே நினைத்த உடலமைப்பை பெறலாம் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளாலேயே உடலை நோயின்றி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது எத்தனை பெரிய வரம். இதை அறிந்த பலர் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அதனால்தான் நம் முன்னோர்களும் நோய் நொடிகளின்றி பல ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளன. அதோடு பாலும் தினமும் குடிக்கும் ஒன்றுதான். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

குறிப்பாக பருவகால சளி, இருமலுக்கும் நிவாரணம் வழங்குகிறது. இதன் இனிப்பு சுவைக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தூங்கும் முன் இந்த பாலை ஒரு கிளாஸ் குடுத்தால் சீக்கிரமே நினைத்த உடலமைப்பை பெறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பூண்டு தாய்ப்பால் சுரக்க உதவும் என்பது ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால் அதை பாலில் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து குடிக்கும்போது இன்னும் பால் சுரப்பது அதிகரிக்கும்.

இவை மட்டுமன்றி அவ்வப்போது வரும் உபாதைகளான மலச்சிக்கல், வயிற்று வலி, வயிறு வீக்கம் , கைக்கால் , முதுகுவலி போன்றவற்றிற்கும் பூண்டுப்பால் உதவுகிறது. சரி இத்தனை நன்மைகள் அடங்கிய பூண்டு பாலை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :

பால் - 1 1/4 கப்
பூண்டு பற்கள் - 4
பனைக்கற்கண்டு - தே.அ
மஞ்சள் - ஒரு சிட்டிகை

செய்முறை :

பூண்டை உறித்துக்கொள்ளுங்கள். பின் அவற்றை ஒன்றும் பாதியுமாக தட்டிக்கொள்ளுங்கள்.

பின் பாலை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். கொதிக்கும்போது பூண்டையும் ,மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

Tea : நீங்கள் சரியான முறையில்தான் டீ போடுகிறீர்களா..? சந்தேகமாக இருந்தால் இதை படியுங்கள்..!

பின் பனைக்கற்கண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பின் வடிகட்டி குடிக்கலாம்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Garlic, Immunity boost, Milk

அடுத்த செய்தி