இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்க இரண்டையும் சரியான அளவில் எப்படி சேர்க்க வேண்டும்..? 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்க டிப்ஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்க இரண்டையும் சரியான அளவில் எப்படி சேர்க்க வேண்டும்..? 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்க டிப்ஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
வீட்டில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் இஞ்சி பூண்டு பேஸ்டை தினமும் அரைப்பதற்கு பதிலாக பலரும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையானதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்வார்கள். இது அவர்களின் சமையலையும் எளிதாக்கும்.
சமையல் குறிப்பு என்பது சமையல் கற்றுக்கொள்ள தொடங்கும் நபர்களுக்கும் சரி.. சமையலில் மாஸ்டர் செஃப் ஆக இருப்பவர்களுக்கும் சரி ஏதோ ஒரு வகையில் அது நிச்சயம் பயன் தரும்.
சமையல் குறிப்புகள் ஏன் இத்தனை வெற்றியடைகின்றன என்றால் சமையலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலை , பக்குவம் இருக்கும். அதை ஒவ்வொருவரும் பகிரும்போது அது சுவையாக மாறுகிறது. அதிலும் இந்திய சமையல் குறிப்புகள் என்பது உலகம் வரை பேசும். அது பசி சார்ந்தது மட்டுமல்லாமல் மருத்துவம் சார்ந்ததாகவும் இருக்கும்.
அந்த வகையில் வீட்டில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் இஞ்சி பூண்டு பேஸ்டை தினமும் அரைப்பதற்கு பதிலாக பலரும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையானதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்வார்கள். இது அவர்களின் சமையலையும் எளிதாக்கும். சிலருக்கு இன்னும் அதை எப்படி அரைப்பதென தெரியாது. சிலர் சீக்கிரம் கெட்டுவிடுகிறதே என புலம்பலாம் அல்லது இஞ்சி சுவை அதிகமாகவோ, பூண்டு சுவை அதிகமாகவோ இருக்கலாம். அவர்களுக்காகவே இஞ்சி பூண்டு பேஸ்ட்டைஎப்படி அரைக்க வேண்டும். அதன் சரியான பக்குவம் என்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 150 கிராம்
பூண்ட் -250 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
இஞ்சி மற்றும் பூண்டு தோலை உறித்து சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
பின் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரையுங்கள். பின் பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
மைய அரைத்ததும் அதை ஒரு டப்பாவில் அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் பக்குவம்.
இஞ்சி பூண்டு பேஸ்டை கண்ணாடி பாட்டிலுக்குள் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் 2 மாதங்கள் தாங்கும். ஃபிரீசரில் வைத்தால் 6 மாதங்கள் வரை தாங்கும். குறிப்பாக உப்பு மற்றும் எண்ணெய் சேர்ப்பதால் அது 6 மாதங்கள் வரை நீடிக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.