முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பூண்டு டீ : கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பூண்டு டீ : கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க

பூண்டு டீ

பூண்டு டீ

பூண்டு டீ நீரிழிவு நோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணியான ஹோமோசிஸ்டீன் என்ற அமினோ அமிலத்தைக் குறைக்கிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அனைத்து சமையல் அறைகளிலும் பூண்டு ஒரு இன்றியமையாத அத்தியாவசிய உணவு பொருளாக இருக்கிறது. அதிலும் இந்திய உணவு வகைகளில் பூண்டுக்கு தனித்துவமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பூண்டு பல மகத்தான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பேஸ்ட், பவுடர், எண்ணெய் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இதனை ஒருவர் தனது விருப்பம் மற்றும் சுவைக்கு ஏற்ப சாப்பிடலாம்.

பெரும்பாலும், பூண்டு வாயு பிரச்சனைக்கு ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூண்டினை சிலர் எண்ணெய்யில் வதக்கி அப்படியே சாப்பிடுவர். அல்லது சட்னி வடிவத்தில் செய்து சாப்பிடுவர். அல்லது பூண்டு பொடியை வெதுவெதுப்பான நீரிலும் காலத்து உட்கொள்ளலாம். காட்டாயம் வாயு தொல்லை நீங்கும். அதேபோல பூண்டு இதய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இதுதவிர, நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் போன்ற சில உடல்நலக் கோளாறுகளுக்கும் பூண்டு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நீங்கள் மேற்கணட நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பூண்டு டீயை முயற்சித்துப் பாருங்கள்.

ஒரு ஸ்பூன் சீரகத்தில் இத்தனை நன்மைகளா ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் பூண்டு டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து குடிக்கலாம். பூண்டு டீ-யில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து கூட தயாரிக்கலாம். அதனுடன் இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்ப்பது கூட டீயின் நன்மையையும் சுவையையும் அதிகரிக்கும். பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்றவை ஏராளமாக உள்ளது.

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. பொதுவாக, மக்கள் குளிர்காலத்தில் பூண்டு டீ குடித்தால் மிகவும் நல்லது. ஏனெனில் பூண்டு டீ நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நீரிழிவு அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூண்டு டீ அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

பூண்டு டீ குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பூண்டு டீ நீரிழிவு நோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணியான ஹோமோசிஸ்டீன் என்ற அமினோ அமிலத்தைக் குறைக்கிறது. மேலும் இது ஒருவரில் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. பூண்டு டீ ஆண்டிபயாடிக் ஆக செயல்படுவதோடு, நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேநீரில் வைட்டமின் சி உள்ளது. இது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பூண்டு கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பூண்டு டீயை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

பூண்டு - 4,

இஞ்சி - சிறிதளவு,

கருப்பு மிளகு - 4-5,

தண்ணீர் - 1 கப்.

செய்முறை :

பூண்டு டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறிது நசுக்கிய இஞ்சி, 1 டீஸ்பூன் நசுக்கிய பூண்டு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தினமும் காலையில் ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணிடாதீங்க...

பாத்திரத்தை அடுப்பில் இருந்து அகற்றி, டீயை வடிகட்டி சூடாக பரிமாறவும். நீங்கள் விரும்பினால் சிறிது இலவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

ஓரளவு சூடு குறைந்த பிறகே, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதிக்கும் டீயில் தேன் மற்றும் எலுமிச்சையை சேர்க்க கூடாது.

First published:

Tags: Garlic, Herbal Tea