Home /News /lifestyle /

வெற்றிலையை வச்சி இப்படியொரு உற்சாக பானமா? ‘பான் ஷாட்’  ட்ரை பண்ணி பாருங்க..

வெற்றிலையை வச்சி இப்படியொரு உற்சாக பானமா? ‘பான் ஷாட்’  ட்ரை பண்ணி பாருங்க..

காட்சி படம்

காட்சி படம்

கல்யாண வீட்டுச் சாப்பாட்டானாலும் சரி, கறி விருந்தாக இருந்தாலும் சரி வயிறார சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் தான் பெரும்பாலானோருக்கு விருந்தே நிறைவாக இருக்கும்.

கல்யாண வீட்டுச் சாப்பாட்டானாலும் சரி, கறி விருந்தாக இருந்தாலும் சரி வயிறார சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் தான் பெரும்பாலானோருக்கு விருந்தே நிறைவாக இருக்கும். அந்த அளவிற்கு தமிழகர்களின் உணவோடு வெற்றிலை பின்னி பிணைந்திருக்கிறது, வட மாநிலங்களில் கூட விருந்து முடிந்ததும் பீடா போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்திய உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பகுதி மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாகவும் வெற்றிலை உள்ளது.

ஆயுர்வேத நிபுணரான மருத்துவர் டிக்ஸா பவ்சர் வெற்றிலையை உட்கொள்வதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி கூறுகையில், "ஆயுர்வேதம் வெற்றிலையின் பல குணப்படுத்தும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை குறிப்பிட்டுள்ளது” என்கிறார்.

இருமல், ஆஸ்துமா, தலைவலி, நாசியழற்சி, மூட்டுவலி, பசியின்மை போன்றவற்றின் சிகிச்சையில் பரவலாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. மேலும் வலி, வீக்கம் மற்றும் கட்டிகள் போன்ற கோளாறுகளுக்கு சிறந்த முறையில் பலன் கொடுக்கிறது.



வெற்றிலையில் "வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன, மேலும் அவை கால்சியத்தின் சிறந்த மூலமாகும்" என்றும் மருத்துவர் டாக்டர் பாவ்சர் தெரிவித்துள்ளார்.

also read : கோடையில் சும்மா ஜில்லுன்னு இருக்க வைக்கும் 5 பானங்கள்... வீட்டிலேயே தயாரிக்கும் வழிமுறைகள் இதோ...!

வெற்றிலையை தொடர்ந்து உட்கொள்வது மனித உடலின் வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. வெற்றிலை நறுமணம் வீசக்கூடியது என்பதால், வீட்டின் முன்புறம் அழகு செடியாகவும் வளர்த்து, இதன் மருத்துவ நன்மைகளை அதிகம் பெறலாம். வெற்றிலை மருத்துவ குணங்கள் தவிர வாய் புத்துணர்ச்சிக்காகவும், துர்நாற்றத்தை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலை பொதுவாக வலி நிவாரணியாகவும், செரிமானத்தை தூண்டும் பொருளாகவும், பசியை தூண்டக்கூடியதாகவும், தலைவலி மருந்தாகவும், மலமிளக்கியாகவும் பல வழிகளில் பயன்படக்கூடியது.

also read : வேம்பு ஜூஸ் குடிச்சா ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு! இதைப்படிங்க முதல்ல!

இத்தனை நன்மைகள் நிறைந்த வெற்றிலையை, கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் பானமாக எடுத்துக்கொள்ள நீங்கள் நினைத்தால், இந்த எளிய செய்முறையான 'பான் ஷாட்' ட்ரை செய்து பாருங்கள்...

தேவையான பொருட்கள்

வெற்றிலை - 4 (சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
குல்கந்த் - 4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
கற்கண்டு - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

*முதலில் வெற்றிலை துண்டுகளை மிக்ஸியில் போடவும்
*பின்னர் தண்ணீர் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
*இறுதியாக தண்ணீர் சேர்த்து மிருதுவாகும் வரை அரைக்கவும்.



வெற்றிலை இயற்கையாக சூடான குணங்கள் நிறைந்ததாக இருந்தாலும், அதனுடன் குல்கந்த், தேங்காய் துருவல், பெருஞ்சீரகம் போன்றவை சேர்க்கப்படுவதால் குளிர்ச்சியான பானமாக மாற்றமடைகிறது. எனவே இந்த பான் ஷாட்டை அருந்தினால் உடலின் கோடை வெப்பத்தை தணிக்க உதவும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சம்மரின் ஆரம்பத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது, எனவே புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியுடனும் இருக்கே உடனே இந்த பான் ஷாட்டை தயார் செய்து அருந்துங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Food, Health Benefits

அடுத்த செய்தி