• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சமநிலையான ஊட்டச்சத்து என்றால் என்ன தெரியுமா..? இதுதான் அது..!

சமநிலையான ஊட்டச்சத்து என்றால் என்ன தெரியுமா..? இதுதான் அது..!

சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு

சமச்சீரான உணவு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. தேவையற்ற உடல் எடை அதிகரித்தலையும் தடுக்கிறது.எனவேதான் ஃபிட்னஸ் பிரியர்களும் சமநிலையான ஊட்டச்சத்தை விரும்புகின்றனர்.

  • Share this:
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீரான உணவுப் பழக்கம் அவசியம் என்பார்கள். அதுதான் நம்மை நல்வாழ்வுக்கு . நோயற்ற வாழ்வுக்கு கொண்டு செல்லும். ஆனால் அந்த சமச்சீரான அல்லது சமநிலையான ஊட்டச்சத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் தெரியுமா..?

சமநிலையான உணவு என்பது உடலின் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நிறைவு செய்வு செய்வதாகும். இது அவர்களுக்கு உடலுக்கு தேவையான கலோரிகளை நிறைவு செய்வது மட்டுமன்றி அவருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

அதாவது சமச்சீரான உணவு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. தேவையற்ற உடல் எடை அதிகரித்தலையும் தடுக்கிறது.எனவேதான் ஃபிட்னஸ் பிரியர்களும் சமநிலையான ஊட்டச்சத்தை விரும்புகின்றனர். குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த சமநிலையான உணவுப் பழக்கம் கைக்கொடுக்கும்.



 




View this post on Instagram





 

A post shared by @nutritionist_poojabohra






இந்த உணவுக் குறிப்பில் மூன்று உணவுகள் நிச்சயம் இருக்க வேண்டும். கால் பாதி புரதம், கால் பாதி கார்போஹைட்ரேட் மற்றும் அரை பாதி காய்கறிகள் அடங்கியிருக்க வேண்டும். இவ்வாறூ சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கான அடிப்படையாகும். இது உங்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவது மட்டுமன்றி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் பழக்கத்தையும் தடுக்கிறது.

நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

ஊட்டச்சத்து நிபுணர்கள் பருவகால உணவுப் பழக்கமும், நம் மண்ணில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதுதான் ஆரோக்கியம் என்கின்றனர். அவ்வாறு சாப்பிடுவது சீரான உணவு பழக்கத்தின் ஆதாரமாகும். இதோடு உடற்பயிற்சியும் செய்யும்போது நோயற்ற வாழ்க்கையை வாழலாம். எப்போதும் ஆற்றல் நிறைந்த மனிதனாகவும் இருப்பீர்கள். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது வாரம் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

 

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: