• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நைட் சுட்ட சப்பாத்தி மீந்துபோச்சா..? காலை உணவுக்கு அதில் உப்புமா செஞ்சிடலாம்..! சமையல் குறிப்பு இதோ...

நைட் சுட்ட சப்பாத்தி மீந்துபோச்சா..? காலை உணவுக்கு அதில் உப்புமா செஞ்சிடலாம்..! சமையல் குறிப்பு இதோ...

சப்பாத்தி உப்புமா | Chapathi upma

சப்பாத்தி உப்புமா | Chapathi upma

ஒரு சுவாரஸ்யமான தேநீர் நேர சிற்றுண்டி அல்லது காலை உணவு வகையாக இந்த ரொட்டியை வைத்து ரொட்டி உப்மா செய்து சாப்பிடலாம்

  • Share this:
ரொட்டி அனைவரும் சாப்பிடும் ஒரு பொதுவான உணவு வகையாகும். கோதுமை மாவு, அரிசி மாவில் பெரும்பாலும் ரொட்டி தயார் செய்யப்படுகிறது. இதனை வைத்து சில எளிமையாக, ருசியான சமையல் வகைகள் செய்யலாம்.

ஒரு சுவாரஸ்யமான தேநீர் நேர சிற்றுண்டி அல்லது காலை உணவு வகையாக இந்த ரொட்டியை வைத்து ரொட்டி உப்மா செய்து சாப்பிடலாம். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகமாக செய்து விட்டால் கூட இதனை செய்யலாம். ரொட்டி உப்புமா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 5
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 2
உப்பு, ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொப்பு
சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
பட்டாணி - 1



செய்முறை :

முதலில் ரொட்டிகளை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிறிய துண்டுகளை உருவாக்க நீங்கள் ஒரு கத்தியை பயன்படுத்தலாம். இதற்கிடையில், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பட்டாணி மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்னர் உங்கள் சுவைக்கு ஏற்ப மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வதக்கவும்.

இப்போது வெட்டிய ரொட்டி துண்டுகளை சேர்க்கவும். பின்னர் ரோட்டி துண்டுகளுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மூடியை எடுத்து 10 விநாடிகளுக்கு மூடி வைக்கவும், பின்னர் மீண்டும் நன்றாக கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தலையை சிறிய துண்டுகளாக அரிந்து அலங்கரித்தால் ரொட்டி உப்புமா ரெடி, சூடாக பரிமாறவும்.

ஓவன் , ஈஸ்ட் இல்லாமல் வீட்டிலேயே பேக்கரி சுவையில் பிரெட் தயாரிக்கலாம் : தேவையான பொருட்கள் இவைதான்..!

இதேபோல தினை ரொட்டி உப்புமாவும் செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள். இதனை சிறிய துண்டுகளாக வெட்டி மேற்கண்ட அதே முறையில் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: