Home /News /lifestyle /

கடையில் நெய் வாங்க தயக்கமாக உள்ளதா..? கமகமனு மணக்க வீட்டிலேயே நெய் தயாரிக்க டிப்ஸ்..!

கடையில் நெய் வாங்க தயக்கமாக உள்ளதா..? கமகமனு மணக்க வீட்டிலேயே நெய் தயாரிக்க டிப்ஸ்..!

நெய்

நெய்

நீங்கள் வீட்டிலேயே தூய்மையான, மணமான நெய்யையும் தயாரிக்கலாம்.

நெய் பெரும்பாலான இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள். சந்தையில் இருந்து வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் வீட்டிலேயே தூய்மையான, மணமான நெய்யையும் தயாரிக்கலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொழுப்பு நிறைந்த பால் - அரை லிட்டர்
தயிர் - 1 கப்
குளிர்ந்த நீர் - 1 கப்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
சீரகம் - 1 ஸ்பூன்



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பால் நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கொதித்த பாலை ஆற வைக்கவும்.

பால் ஆறிய பின்னர் அதன் மேற்பரப்பில் ஆடைகள் உருவாகும். இப்போது மெதுவாக பாலின் மேல் மிதக்கும் பாலாடையை சேகரிக்கவும். இதனை ஒரு காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றி பிரிட்ஜில் உறைய வைக்கவும்.

15-20 நாட்களுக்கு பின்னர் அந்த உறைந்த ஆடையை எடுத்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அறை வெப்பநிலையில் சிறிது நேரம் வைத்து பின்னர், இதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும் (3 கப் பாலாடைக்கு 2 கப் தயிர் சேர்க்கலாம்).

குழந்தைகள் முருங்கைக்கீரையை வெறுக்கிறார்களா..? கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் இப்படி செஞ்சு கொடுங்க..!

ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கலவையை அப்படியே மூடி வைக்கவும். அதன் பின்னர் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.

பிளண்டரை கொண்டு இந்த கலவையே நன்கு கலக்க வேண்டும், அப்போது வெள்ளை நிறத்தில் வெண்ணை போன்ற பொருள் மேலே வரும். அதனை பந்து போல உருட்டி எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் சூடு செய்யவும். குறைந்தது 45 நிமிடங்களுக்கு பின்னர் இதிலிருந்து நெய் உருகி வரும். அந்த நேரத்தில் இதில் சிறிது சீரகம் சேர்த்து நுரைகள் அடங்கும் வரை சூடான பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதனை வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளுங்கள். சுவையான நெய் தயார்! கை விடாமல் இருந்தால் கேட்டு போகாமல் நீண்ட நாள் வரை இருக்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cooking tips, Ghee

அடுத்த செய்தி