குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குடைமிளகாய் புதினா புலாவ் : செய்து கொடுங்கள்..விரும்பி சாப்பிடுவாங்க..!

குடைமிளகாய் புதினா புலாவ்

லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும்.

  • Share this:
    குடைமிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமன்றி பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும்.

    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    புதினா - ஒரு கைப்பிடி
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
    பட்டை - 1 துண்டு
    சீரகம் - 1/4 tsp
    எண்ணெய் - 3 tsp
    நெய் - 2 tsp
    உப்பு - தே.அ
    பாஸ்மதி அரிசி - 1 கப்



    செய்முறை :

    சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து ஆற வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் கடாய் வைத்து எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை , சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

    எளிமையான முறையில் அசத்தல் சிக்கன் ஃபிரை : டிரை பண்ணி பாருங்க..அடிக்கடி செய்வீங்க..!

    பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். அதை பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள்.

    பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்குங்கள்.

    பின் குடைமிளகாய் , உப்பு சேர்த்து வதக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நன்கு வதங்கியதும் வடித்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் புதினா சாதம் தயார்.
    Published by:Sivaranjani E
    First published: