டயட்டில் முட்டை சேர்த்துக்கொள்வது நல்லதா? மருத்துவ ஆய்வின் முடிவுகள் என்ன?

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வளப்படுத்துவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வளப்படுத்துவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

  • Share this:
இந்திய கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது, அவரின் டயட் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கோலி, நிறைய காய்கறிகள், சில முட்டைகள், இரண்டு கப் காபி, அதிக கீரைகள் மற்றும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்தார். இதனால் முட்டையை டயட்டில் சேர்த்துக்கொள்வது குறித்த விவாதம் கிளம்பியது.

முட்டையில் இருக்கும் நன்மைகள் மற்றும் அதன் மீது இருக்கும் கட்டுக்கதைகள் என்ன என்பதை இங்கு தெளிவாக பார்க்கலாம்...

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

முட்டைகளில் இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கொழுப்பு, புரதம், கோலின், பயோட்டின் - வைட்டமின் பி 7, வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் மற்றும் அயோடின் ஆகியவை உள்ளன. மூளை நரம்பு வளர்ச்சிக்கு, குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோலின் அவசியம். அது முட்டையில் இருக்கிறது. ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வளப்படுத்துவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

முட்டையில் இருக்கும் கொழுப்பு:

ஒரு பெரிய முட்டையில் 186 முதல் 200 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. கொழுப்பின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முட்டையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. இதயத்தை பாதுகாக்கும் முட்டை, நோயில் இருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படாது என 2008ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று கூறுகிறது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பிற்காலத்தில் இதயம் செயழிலக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முட்டை சாப்பிட வேண்டும்.

முட்டை கட்டுக்கதைகள்:

வெள்ளை ஓடு, பிரவுன் கலர் ஓடு இருக்கும் முட்டைகளுக்கு ஊட்டச்சத்து விகிதங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. கோழி இணையும் சேவலைப் பொறுத்து முட்டை ஓட்டின் நிறம் இருக்கும். மேலும், கோழியின் வளர்ச்சி, அது எடுத்துக்கொள்ளும் உணவு ஆகியவற்றின் அடிப்படையில் முட்டையில் இருக்கும் ஓமேகா 3, வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டசத்துகளின் விகிதத்தில் மாறுபாடு இருக்கலாமே தவிர, வேறு எந்த வித்தியாசமும் இருக்காது. இரண்டு வித முட்டைகளையும் சாப்பிடலாம்.

முட்டையை பச்சையாக சாப்பிடலாமா?

பச்சை முட்டை அல்லது சமைக்காத முட்டையை சாப்பிடுவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக மருத்துவர்கள் எச்சரிப்பது என்னவென்றால் சமைக்காத முட்டைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர். கோழியின் மலம் மற்றும் பாக்டீரியாக்கள் சேதமடைந்த ஓட்டின் வழியாக உள்ளே செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும், முட்டையை சமைத்து சாப்பிடுவது சிறந்தது எனவும் கூறுகின்றனர். மதுபானங்களில் முட்டையை பயன்படுத்தினால், பாக்டீரியாக்களை கொல்லும் என பரவியிருக்கும் தகவலில் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

முட்டை பாதுகாப்பு:

உணவாக பயன்படுத்தப்படும் முட்டையை பச்சையாக சாப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் எச்சரிக்கிறது. முட்டை ஓடுகள் முறையாக உருவாகாத நிலையில் கோழியில் இருக்கும் சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஓட்டை துளைத்துக்கொண்டும் அந்த பாக்டீரியாக்கள் செல்லும். எனவே உடைந்த முட்டைகளை சாப்பிடக்கூடாது. பிரிட்ஜில் வைத்தால் வெப்பநிலையானது 40°F-க்கு கீழாக இருக்க வேண்டும். வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்கள் நன்கு சமைக்கப்படும் வரை காத்திருந்து முட்டையை சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை வெறும் கையால் தொட்டால், உடனடியாக சோப் மூலம் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும்.
Published by:Archana R
First published: