• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Ajwain Water : ஓமம் தண்ணீர் காலையில் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளை சரி செய்யலாமா..?

Ajwain Water : ஓமம் தண்ணீர் காலையில் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளை சரி செய்யலாமா..?

ஓமம் தண்ணீர்

ஓமம் தண்ணீர்

நுரையீரலை சுத்தப்படுத்தவும், தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயளிகளின் சுவாசப் பிரச்னைக்கு  ஓமம் நிவாரணியாக இருக்கிறது.

  • Share this:
ஓமம் சமையலுக்கு மட்டுமன்றி , சில வீட்டு வீட்டு வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் கொடுக்கப்படும். பெரும்பாலும் ஓமம் தண்ணீர் மருந்து கடைகளில் வாங்கிதான் கொடுப்பார்கள். ஆனால் அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் குடிக்கலாம். அப்படி அதை எந்தெந்த பிரச்னைகளுக்கெல்லாம் குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஓமம் தண்ணீர் செய்ய தேவையான பொருட்கள் :

ஓமம் - 1 tsp
தண்ணீர் - 500 ml
எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - 1 tsp
கருப்பு உப்பு - தே.அ
தேன் - 1 tsp



செய்முறை :

ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வேண்டும்.

கொதித்ததும் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் எலுமிச்சை, மஞ்சள் தூள், கருப்பு உப்பு, தேன் ஆகியவற்றை கலந்து குடிக்க வேண்டும்.

ஓமத்தில் இருக்கும் நன்மைகள் :

ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.

Belly Fat Reduce : தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சிடர் வினிகரை எப்போது குடிக்க வேண்டும்..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

என்னென்ன பாதிப்புகளை சரி செய்யும் ?

நோய் தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். குறிப்பாக சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும். கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

நுரையீரலை சுத்தப்படுத்தவும், தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்னைக்கு  ஓமம் நிவாரணியாக இருக்கிறது.

வயிற்று வலி, இரப்பைக் குடல் பிரச்னைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒமம் நீரானது குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.



முடக்கு வாதம், அழற்சி நோய் போன்ற பிரச்னைகளுக்கும் ஓமம் உதவுகிறது.

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் உதவுகிறது. இது விரைவில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: