முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பூண்டின் மருத்துவ குணங்களை முழுமையாக பெற இந்த 10 நிமிட ரூல்ஸ் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர்

பூண்டின் மருத்துவ குணங்களை முழுமையாக பெற இந்த 10 நிமிட ரூல்ஸ் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர்

பூண்டு

பூண்டு

பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிமைக்ரோபயல் , ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேடரி பண்புகள் நிறைவாக உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலருடைய சமையலில் பூண்டு இல்லாமல் அந்த ரெசிபியே இருக்காது. இறுதியாக அந்த பூண்டை தட்டி போட்டால்தான் சுவை கமகமவென வரும் என்பார்கள். அப்படி பூண்டு உணவின் சுவை மற்றும் மணத்திற்கு பூண்டு உதவினாலும் அதன் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோயல். அதற்கு இந்த 10 நிமிட ரூல்ஸை பின்பற்ற சொல்லி சில குறிப்புகளையும் தருகிறார்.

பூண்டு நன்மைகள் :

பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிமைக்ரோபயல் , ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேடரி பண்புகள் நிறைவாக உள்ளன. எனவே இது உணவின் தலைசிறந்த மருந்து என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மூமால் ஆசிஃப். இப்பதிவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதை இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பேட்டியளித்த கரிமா கோயலும் ஒப்புக்கொள்கிறார். அதோடு அவர் “ பூண்டு புற்றுநோய், இதய நோய் , நீரிழிவு நோய் போன்ற பல வகையான நோய்களை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. அதோடு உடல் ஆரோக்கியத்தை தன் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலம் மேம்படுத்தவும் செய்கிறது” என்கிறார்.

அதுமட்டுமன்றி இது பல வகையான தொற்றுகளையும் எதிர்த்து போராடும் ஆற்றலை உடலுக்கு அளிக்கிறது. இதற்கு காரணம் அதில் உள்ள அல்லிசின் என்னும் பண்புதான். நிபுணர்களின் கூற்றுப்படி பூண்டில் இயற்கையாக உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் சில குறிப்பிட்ட நோய்களான மறதி நோய், அல்சைமர் போன்ற மூளையை பாதிக்கும் நோய்களிலிருந்தும் பாதுகாப்பு தருகிறது.

Also Read : சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..? விளக்கும் ஆய்வு

இப்படி எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கிய பூண்டை சரியான முறையில் சமைத்தால்தான் அவற்றை முழுமையாக பெற முடியும். எனவே பூண்டை வறுப்பது, வதக்குவது என சமைக்கும்போது அதன் அல்லிசின் என்னும் பண்பு போய்விடுகிறது. அதோடு அதன் நீர்ச்சத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் சி சூடேற்றும்போது நீங்கிவிடுகிறது. எனவே அதன் நன்மைகளை அப்படியே பெற வேண்டுமெனில் இந்த 10 நிமிட ரூல்ஸை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம் என்கிறார் மூமல் ஆசிஃப்.
 
View this post on Instagram

 

A post shared by Moomal Asif (@moomalasif)அதாவது பூண்டை சமைக்கும்முன் அதை தட்டி அல்லது பொடியாக நறுக்கி கை படாமல் 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இந்த சமயத்தின் பூண்டில் உள்ள அல்லிசின் சுரந்திருக்கும். அந்த 10 நிமிடத்திற்கு கை வைக்கக் கூடாது என்பது அவசியம். அப்படி வைத்த பின் நீங்கள் பூண்டி எப்படி வேண்டுமென்றாலும் சமைக்கலாம். அதன் பண்புகள் எதுவும் மாறாது. அதன் மருத்துவ குணங்களை முழுமையாக பெறலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மூமல் ஆசிஃப்.

First published:

Tags: Cooking tips, Garlic, Health Benefits