குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ‘கிவி’ பழம்.. அசத்தல் ரெசிப்பிகள் இங்க இருக்கு..

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ‘கிவி’ பழம்.. அசத்தல் ரெசிப்பிகள் இங்க இருக்கு..

கிவி

கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.

  • Share this:
பசலிப்பழம் என்று அழைக்கப்படும் கிவி (Kiwi) சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது சீன நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருப்பதால் அனைவருக்கும் பிடித்த பழமாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியத்தை வழங்குகிறது. மேலும், வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும்.

குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சீர் செய்கிறது. கிவியை சாப்பிடுவதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றன. எனவே கிவி பழத்தை தினமும் சாப்பிடுவதால் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் இந்த குளிர்காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிவி பழத்தை வைத்து சில சுவையான உணவு வகைகளை செய்து கொடுங்கள். அந்த வகையில் சில...1. மூங் தால் கிவி தேங்காய் சூப் (Moong Dal Kiwi Coconut Soup)

தேவையான பொருட்கள்:

மூங் தால் - 1 கப் (உப்பு சேர்த்து வேகவைத்தது)
கிவி பழம் - 2 (தோல் எடுத்து நறுக்கி வைத்தது)
தேங்காய் கிரீம் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலைகள் -2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகளில் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு கிராம்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
கேரட் - 1/2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறி தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லி தேவையான அளவு.

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலைகள், சீரகம், கொத்தமல்லி, கருப்பு மிளகுத்தூள் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட் சிறிது சேர்க்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கறித்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேகவைத்த மூங் தாலை நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அதில் நறுக்கி வைத்த கிவி பழத்தை சேர்த்து கிளறவும். பின்னர் இந்த கலவையை அரைத்து மற்றொரு கடாயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

இறுதியாக அதில் தேங்காய் கிரீம் சேர்த்து கலக்கவும். வெப்பத்தை அணைத்து சூப்பினை கிண்ணத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறலாம். குளிர்காலத்தில் உடலை சூடேற்றுவதற்கான சிறந்த வழியாக சூப் கருதப்படுகிறது. இது ஆரோக்கியமானது, சுவையானது மற்றும் வயிற்று குடலுக்கு நல்லது. கிவி, மூங் பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவை பல நன்மைகளை உள்ளடக்கியது. இது எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் ஏற்றதாக அமைகிறது.2. மாதுளை மற்றும் கிவி சாலட் (Pomegranate and Kiwi Salad)

தேவையான பொருட்கள்:

மாதுளை விதைகள் -1/4 கப்
கிவி பழம் - 2
ரோமைன் லெட்டியூஸ் இலைகள் - 5 முதல் 7
ஐஸ்பெர்க் லெட்டியூஸ் இலைகள் - 8 அல்லது 10
லோலோ ரோஸோ லெட்டியூஸ் இலைகள் - 5 முதல் 7
சீஸ் - 50 கிராம்
பூண்டு- 5 (நறுக்கியது)
கடுகு - 1 தேக்கரண்டி
புதினா இலைகள் - தேவையான அளவு
ஆரஞ்சு சாறு -1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு, கருப்பு மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் இரண்டு கிவி பழங்களை சிறியதாக நறுக்கி வைத்து , அதனுடன் நறுக்கப்பட்ட லெட்டியூஸ் இலைகளையும் சேர்க்கவும். அதன் மேல் பூண்டு, கடுகு, புதினா இலைகள், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய், உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து மென்மையாக கலக்கவும். அதன் மேல் சீஸ் சேர்த்து, மாதுளை விதைகளை தூவி மீண்டும் கலந்து சாப்பிடலாம். லெட்யூஸ், கிவி, மாதுளை ஆகியவற்றை கொண்டு சாலட் போன்று செய்து சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்கும்.3. கிவி பிரட் ஹல்வா (Kiwi Bread Halwa)

கிவி, உலர்ந்த பழங்கள், பிரட் மற்றும் நெய் ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு வகை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். பிரட் அல்வா செய்யும் போது அதனுடன் சிறிது கிவி பழத்தை சேர்த்தால் போதும்.4. கிவி அப்ஸைட்-டவுன் கேக் (Kiwi Upside-Down Cake)

குழந்தைகளுக்கு பிடித்த மற்றொரு இனிப்பு வகை கேக். மேலும் கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கேக் கட்டாயம் செய்யப்படும். நீங்கள் கேக் செய்யும்போது சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்ட கிவி பழத்தையும் சேர்த்து செய்து பாருங்கள். சாதாரணமாக கேக் செய்யும்போது கேக் கலவையின் அடிப்பகுதியிலும், நடுவிலும் கிவி பழங்களை அடுக்கி அவனில் வைத்து பேக் செய்து சாப்பிடலாம்.5. கிவி மற்றும் பிளாக் ஆலிவ் டம்பளிங் (Kiwi and Black Olive Dumplings)

தேவையான பொருட்கள்:

வாத்து இறைச்சி - 300 கிராம்
கருப்பு ஆலிவ் - 50 கிராம்
கிவி பேஸ்ட் - 100 கிராம்
கிவி சிரப் - 100 மில்லி
சர்க்கரை - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு.

மோல்டிங் செய்ய:

உருளைக்கிழங்கு ஸ்டார்ச்
கோதுமை ஸ்டார்ச்

செய்முறை:

வேகவைத்த வாத்து இறைச்சியுடன் கருப்பு ஆலிவ், கிவி பேஸ்ட், கிவி சிரப்,சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கோதுமை ஸ்டார்ச், உருளைக்கிழங்கு ஸ்டார்ச் மற்றும் கிவி சிரப் கொண்டு மோல்டிங் தறிக்க வேண்டும். அதனுள் கலவையை ஸ்டப் செய்து மூடி 3 முத்த 4 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்க வேண்டும். இது ஆரோக்கியத்துக்கும் சுவைக்கும் இடையில் சமநிலையைத் தருகிறது.

 
Published by:Sivaranjani E
First published: