• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு விருப்பமான எலுமிச்சை சாதம் : இந்த மாதிரி வித்தியாசமா டிரை பண்ணி பாருங்க..!

குழந்தைகளுக்கு விருப்பமான எலுமிச்சை சாதம் : இந்த மாதிரி வித்தியாசமா டிரை பண்ணி பாருங்க..!

எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதம் விரைவில் கெட்டுப்போகாது என்பதால் வெளியூர் பயணத்தின் போது கொண்டு செல்லவும் ஏற்றது. இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும்.

  • Share this:
எலுமிச்சை சாதம் என்பது எளிதாகத் தயார் செய்யக் கூடிய கலவை வகை சாதம். பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் டிபன்பாக்ஸில் எடுத்துச் செல்லவும், எலுமிச்சை சாதம் விரைவில் கெட்டுப்போகாது என்பதால் வெளியூர் பயணத்தின் போது கொண்டு செல்லவும் ஏற்றது. இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1/2 கிலோ
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 3 ஸ்பூன்
சமையல் எண்ணெய், உப்பு
கருவேப்பிலை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
மிளகாய்வற்றல் - 3
இஞ்சி - 1 துண்டு கொத்தமல்லி - அலங்கரிக்க
நிலக்கடலை - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 1/4 கப்



செய்முறை :

முதலில் அரிசி, கடலை பருப்பை தனித்தனியாக நன்கு கழுவி ஊற வைக்கவும். 2-3 மணி நேரம் ஊற வைத்த பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து சாதம் தயார் செய்யவும். சாதத்தை குழைய விடாமல் உதிரிஉதிரியாக வடித்துக் கொள்ளவும் (நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் உதிராக வரும்) . கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.

இரவு தூங்க செல்லும் முன் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்..!

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். மற்றொரு கடாயில் நிலக்கடலை, முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அடுத்து வடித்த வைத்துள்ள சாதத்தை கொட்டிக் கிளறவும். சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான எலுமிச்சை சாதம் ரெடி. இதற்கு சைடிஷ்சாக கொத்தமல்லி துவையல், உருளை கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும்.

கொத்தமல்லி துவையல் செய்ய :  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னறிமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதனுடன் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கி ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால் சுவையான துவையல் தயார்!.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: