முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பால் கொழுக்கட்டை ரெசிபி.. மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்..

பால் கொழுக்கட்டை ரெசிபி.. மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்..

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். சர்க்கரை நோய் இருந்தாலும் அவர்களின் மனம் இனிப்பையே தேடும். அப்படிப்பட்ட இனிப்பு வகைகளில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்

அரிசி மாவு-1/2 கப்

பால்-1/2 கப்

தண்ணீர்-தேவையான அளவு

சர்க்கரை-1/2 கப்

நெய்-2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி-2 கிராம்

உப்பு-தேவையான அளவு

குங்குமப்பூ-சிறிது

பிஸ்தா-5-6

பாதாம்-5-6

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் அரிசி மாவு, பால் , மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

2. பின்னர் மாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கட்டி உண்டாகாமல் கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

3. மாவை நன்கு ஆறவைத்த பிறகு அதில் நெய்யை ஊற்றி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்க வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

4. பின்பு உருண்டிய மாவை பாலில் போட்டவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

5. கடைசியில் பிஸ்தா மற்றும் பாதாமை அந்த கலவையில் தூவி விடுங்கள். இப்போது சுவையான பால் கொழுக்கட்டை ரெடி...

First published:

Tags: Milk, Sweet recipes