கேரளா ஸ்டைல் கடலை கறி

காலை மற்றும் மாலை உணவிற்கு ஏற்றது.

Web Desk | news18
Updated: March 21, 2019, 8:48 PM IST
கேரளா ஸ்டைல் கடலை கறி
கடலை கறி
Web Desk | news18
Updated: March 21, 2019, 8:48 PM IST
கேரள உணவுகளில் கடலை கறியும் பிரதானமானது. சப்பாத்தி, புட்டு, போன்ற காலை மற்றும் மாலை உணவிற்கு பொருத்தமான சைட் டிஷ்ஷான இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

கருப்புக் கடலை - 1 கப்


துருவிய தேங்காய் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/2 tsp

Loading...

கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
தனியா பொடி - 1 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
கரம் மசாலா பொடி - 1/2 tsp
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 tsp
கடுகு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதலவு
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயப் பொடி - 1/4 tspசெய்முறை :

கருப்புக் கடலை நன்கு கழுவி 6 - 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் கடலையை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றுங்கள். மசியும் வரை விசில் விட்டு இறக்கிவிடுங்கள்.

அடுத்ததாக துருவிய தேங்காயை கடாயில் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதை தற்போது மிக்ஸியில் மைய தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி கூழ் போல் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனைப் போனதும் வேக வைத்த கடலையை தண்ணீரோடு அப்படியேக் கொட்டி கொதிக்க விடவும். கொதிநிலை வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும். நன்குக் கொதித்ததும் இறக்கி விடவும்.

தற்போது தாளிக்க கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு போடவும். பொறிந்ததும் கறிவேப்பிளை , காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். தற்போது அடுப்பை அனைத்து குழம்பில் ஊற்றவும்.

சுவையான கேரளா ஸ்டைல் கடலை கறி தயார்.
First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...