பாகற்காயின் நற்பலன் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, அதன் சுவை குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். பாகற்காய் என்று சொன்ன உடனே, அதுவா ரொம்ப கசக்குமே என்று முகம் சுழித்து சொல்லிவிடுவோம்.
ஆனால், பாகற்காயில் நமது உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. இன்சுலின் சீராக இருந்தால் ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால் கட்டாயம் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பாகற்காயை புளிக்குழம்பு வைத்தும் சாப்பிடலாம் அல்லது கூட்டு, பொறியல் செய்தும் சாப்பிடலாம். ஆனால், இப்படி செய்து சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கான புதுமையான சமையல் குறிப்பை இந்த செய்தி மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
அதுதான் கேரளா ஸ்டைல் பாகற்காய் ஊறுகாய். ஆம், கேரளாவில் உள்ள நீரிழிவு நோயாளிகள் தினந்தோறும் இதனை எடுத்துக் கொள்கின்றனர்.
பாகை ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்
பாகற்காய் - 7
வினிகர்/எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 கப் அளவு
ஜீரகம் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்
ஊறுகாய் தயாரிப்பது எப்படி
முதலில் பாகற்காயை சுத்தமான தண்ணீரில் கழுவி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அளவில் வெட்டிக் கொள்ளவும். வட்டமாக இருந்தால் இன்னும் நல்லது. நறுக்கிய பாகற்காயில் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த பாகற்காயை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
தண்ணீரை வடித்து, வேகவைக்கப்பட்ட பாகற்காயை ஒரு துணியில் கிடத்தி வெயிலில் 2 அல்லது 3 மணி நேரம் காயவிடவும். பெருங்காயம், ஜீரகம், மிளகாய்தூள் உள்ளிட்ட மசாலா பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஈரமில்லா பாத்திரத்தில், அரைத்த மசாலா மற்றும் பாகற்காயை சேர்த்து பிசறி விடவும். எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து மீண்டும் பிசறி வைக்கவும்.
Also Read : மக்காச்சோளத்தில் இந்த மாதிரிலாம் கூட செய்ய முடியுமா..? நியூ ரெசிபீஸ் இதோ..
இப்போது மேரினேட் செய்யப்பட்ட பாகற்காயை வெயிலில் 4 முதல் 5 நாட்கள் வைத்திருக்கவும். தேவைப்படும் பட்சத்தில் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாயை 3 வாரங்களுக்கு வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
பலன்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவுப் பொருள் இந்த பாகற்காய் ஊறுகாய் ஆகும். குழந்தைகள் பாகற்காயை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் அழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நச்சுக்கள் அனைத்தையும் பாகற்காய் அழித்துவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bitter gourd, Healthy Food, Pickle