ஷமி கபாப் முதல் கீமா பரோட்டா வரை சண்டேவை அசத்தலாக்கும் ஃபுட் ரெசிபீஸ்..!

உணவு

ஞாயிறு அன்று அசைவ உணவாக இருந்தாலும் சைவ உணவாக இருந்தாலும் பிடித்த உணவுகளை செய்து சாப்பிட முயல்கிறோம். அந்த வகையில் நீங்கள் இந்த சண்டே வீட்டில் குடும்பத்தோடு செய்து பார்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இதோ..

  • Share this:
ஞாயிறு என்றாலே கொண்டாட்டத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. எனவேதான் அன்று அசைவ உணவாக இருந்தாலும் சைவ உணவாக இருந்தாலும் பிடித்த உணவுகளை செய்து சாப்பிட முயல்கிறோம். அந்த வகையில் நீங்கள் இந்த சண்டே வீட்டில் குடும்பத்தோடு செய்து பார்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இதோ..

1. ஃபிர்னி (Phirni)

காலையில் இனிப்புக்களை சாப்பிடுவதன் மூலம் பண்டிகை தினத்திற்கு ஒரு நல்ல ஆரம்பத்தை தரமுடியும். அந்த வகையில் இன்றைய தினத்தில் செய்யப்படும் ஃபிர்னி என்பது பால், அரிசி, கோவா மற்றும் நட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சூப்பர் ஈஸி இனிப்பு வகை ஆகும். இதனை நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.செய்முறை:

1 கப் அரிசியை கழுவி ஊற வைக்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு பாலை சூடாக்கி கொள்ளுங்கள். அது ஒரு கொதி நிலைக்கு வரட்டும். பால் நன்றாக கொதித்தவுடன் அதில் அரிசி சேர்க்கவும். சிறிது நேரம் வேகவைத்த பிறகு, அதில் அரைத்த கோவாவைச் சேர்த்து அத்துடன் சர்க்கரையைத் சேர்க்கவும்.
சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை சமைக்கவும். கலவை ஒரு திக்கான கீர் பதத்திற்கு வந்தவுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதனை ஒரு கிணத்தில் மாற்றி, அதன் மேல் நொறுக்கிய நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

2. ஷமி கபாப் (Shami Kebab) :

இந்த கபாப்ஸ் மிகவும் ருசியானவை. ஷமி கபாப்ஸ் கொண்டை கடலை பருப்பு, மட்டன் துண்டுகள் மற்றும் நிறைய மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவையான கபாப்-ஐ எவ்வாறு செய்யலாம் என்பதை விரிவாக காண்போம்.செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் மட்டன், சிவப்பு மிளகாய் தூள், தண்ணீர், சீரகம், பச்சை ஏலக்காய், கருப்பு மிளகு, சன்னா பருப்பு, பூண்டு, கிராம்பு, இஞ்சி, உப்பு சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, கலவையை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். இறைச்சி வெந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். கலவை குளிர்ந்ததும் அதனை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அந்த கலவையில் பிசைந்த வேகவைத்த முட்டை மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் அதனுடன் கொத்தமல்லி இலைகள், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை சிறிய துண்டுகளாக பிடித்து வறுக்க வேண்டும். இதனை க்ரீன் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

சூப்பரான சுவையில் சீரக சம்பா அரிசியில் தேங்காய் பால் மட்டன் பிரியாணி : எப்படி செய்வது தெரியுமா?

3. மட்டன் லிவர் கிரேவி:

(Talli Kaleji) : தல்லி காலேஜி அதாவது மட்டன் லிவர் கிரேவி ஒரு எளிய செய்முறையாகும். இது மட்டன் லிவர் துண்டுகளை கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த ஆரோக்கியமான உணவினை சூடான சப்பாத்திகளுடன் வைத்து சாப்பிடலாம்.செய்முறை:

தல்லி காலேஜிக்கு, முதலில், இறைச்சியை தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில், மிளகாய் தூள், சீரகம், மஞ்சள் தூள் சேர்க்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதில் நறுக்கப்பட்ட மட்டன் கல்லீரல் துண்டுகள் மற்றும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு அதில் மாரினேட் செய்து வைத்துள்ள மட்டன் லிவர் துண்டுகளை சேர்க்கவும். அதனை 2 நிமிடங்களுக்கு வறுக்கவும். இறைச்சி வெந்ததும் கூடுதல் எண்ணெயை வடிகட்டவும். சுவையான மட்டன் காலேஜி ரெடி.

4. பூரி ஹல்வா (Puri Halwa) :

சந்தேகத்திற்கு இடமின்றி பக்ரீத் பண்டிகையின் காலை உணவு வகைகளில் பூரி ஹல்வாவும் ஒன்று. இது ஒரு ஆரோக்கியமான சுவையான உணவாகும். இது நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிற்றை ஃபுல்லாக வைக்க இந்த ஒரு டிஷ் போதும். நீங்கள் பூரிகளை எளிதில் செய்யலாம், ஆனால் ஹல்வா ஒரு நல்ல கெட்டியான நிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் ரவை ஹல்வாவை நீங்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை பாப்போம்.செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி அதனுடன் சர்க்கரை சேர்த்து குங்குமப்பூ இழைகளையும் சேர்த்து பாகு பதத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு கடாயில், நெய்யை சூடாக்கி, உங்களுக்கு பிடித்த உலர் பழங்களை வறுக்கவும். அதை ஒரு கிணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொது கடாயில் ரவை எடுத்து லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை அதனை நெய்யில் வறுக்கவும். பிறகு தயார் செய்து வைத்த சர்க்கரை பாகை சேர்த்து நனவு கலக்க வேண்டும். இறுதியாக கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலவை கெட்டியானதும் அதில் வறுத்த உலர் பழங்களை சேர்த்து பரிமாறலாம்.

5. கீமா பரோட்டா: (Keema Paratha) :

கீமா பரோட்டா ஒரு முழுமையான காலை உணவு ஆகும். பொதுவாக ஆலு அல்லது பன்னீர் ஸ்டஃபிங்கிற்கு பதிலாக, இந்த பராத்தாவில் கீமா (துண்டு துண்தாக வெட்டப்பட்ட மட்டன்) ஸ்டஃபிங் இருக்கும். எனவே, இந்த உணவை உங்கள் பக்ரிட் மெனுவில் இணைக்கலாம். இதனை எப்படி செய்வது?செய்முறை:

கீமா பராத்தா தயாரிப்பதற்கு, கோதுமை மாவை பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். இப்போது ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி வெட்டி வைத்த வெங்காயத்தை வறுக்கவும்.

பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட மட்டனை சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். இதனை 3 முதல் 4 நிமிடங்களுக்கு வறுக்கவும். இப்போது சிவப்பு மிளகாய் தூள், உப்பு போன்ற மசாலாப் பொருள்களைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து, அதில் ¾ கப் தண்ணீர் சேர்க்கவும்.
கடாயை மூடி தண்ணீர் வறண்டு போகும் வரை கொதிக்கவைக்க வேண்டும். கடைசியாக தேவையான அளவு எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதில் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்போது மாவை தேய்த்து அதன் நடுவே இந்த கவலையை வைத்து பின்னர் மீண்டும் சப்பாத்தி போல பதத்திற்கு உருட்டி, தவாவில் சமைக்கவும். இதனை நல்ல சப்ஜியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 
Published by:Sivaranjani E
First published: