• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விநாயகர் சதுர்த்திக்கு கதம்ப சுண்டல் செய்யலாம் வாங்க...

விநாயகர் சதுர்த்திக்கு கதம்ப சுண்டல் செய்யலாம் வாங்க...

கதம்ப சுண்டல்

கதம்ப சுண்டல்

அதிக ஊட்டச்சத்துகொண்ட இந்தக் கதம்ப சுண்டலைச் செய்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம். இதனை எப்படி செய்வது என்பதை 2தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... |

  • Share this:
பலகாரம் இல்லாமல் பண்டிகை இல்லை. சுண்டல் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே இல்லை. அதிலும் எல்லாப் பயறுகளும் கலந்த இந்த நவரத்தின சுண்டல் விநாயகப் பெருமானுக்கு விருப்பமானது... இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... 

தேவையான பொருட்கள்:

மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிவப்பு ராஜ்மா - தலா 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

தேங்காய்த் துருவல்தேவைக்கேற்ப

மாங்காய்த் துருவல் தேவைக்கேற்ப

கறிவேப்பிலை தேவைக்கேற்ப

கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை

பயறுகளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இந்த கதம்ப சுண்டல் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும், வருடா வருடம் கொழுக்கட்டை செய்வது போல சுண்டலையும் விநாயகர் சதுர்த்திக்கு செய்வது வழக்கம்...

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி..

குறிப்பு

இன்னும் காரமாக, சுவையாக இந்தச் சுண்டலைப் படைக்க வேண்டுமானால் கடலைப்பருப்பு, தனியா - தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் நான்கு சேர்த்து வறுத்துப் பொடித்து இதில் தூவி கமகமவென கணபதிக்குப் படைக்கலாம்...

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?   

விநாயகர் சதுர்த்திக்கு இந்த டயட் கொழுக்கட்டையை செஞ்சுபாருங்க..         

ஓட்ஸ் கொழுக்கட்டை ரெசிபி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: