Home /News /lifestyle /

சத்துகள் நிறைந்த கதம்ப சுண்டல் எப்படி செய்வது?

சத்துகள் நிறைந்த கதம்ப சுண்டல் எப்படி செய்வது?

கதம்ப சுண்டல்

கதம்ப சுண்டல்

அதிக ஊட்டச்சத்துகொண்ட இந்தக் கதம்ப சுண்டலைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தினமும் ஈவினிங்க குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் என்று குழப்பமாக இருக்கும். இன்றைக்கு  எல்லாப் பயறுகளும் கலந்த இந்த நவரத்தின சுண்டலை செய்து கொடுங்கள் ... அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... 

தேவையான பொருட்கள்:

மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிவப்பு ராஜ்மா - தலா 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

தேங்காய்த் துருவல்தேவைக்கேற்ப

மாங்காய்த் துருவல் தேவைக்கேற்ப

கறிவேப்பிலை தேவைக்கேற்ப

கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை

பயறுகளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இந்த கதம்ப சுண்டல் கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும்...

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

குறிப்பு

இன்னும் காரமாக, சுவையாக இந்தச் சுண்டலைப் செய்ய வேண்டுமானால் கடலைப்பருப்பு, தனியா - தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் நான்கு சேர்த்து வறுத்துப் பொடித்து இதில் தூவி கமகமவென சாப்பிடலாம்...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Evening Snacks

அடுத்த செய்தி