முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கருவாட்டு பிரியர்களுக்கு ஒரு சர்பிரைஸ்... இந்த ரெசிபியை கண்டிப்பாக செஞ்சு பாருங்க...

கருவாட்டு பிரியர்களுக்கு ஒரு சர்பிரைஸ்... இந்த ரெசிபியை கண்டிப்பாக செஞ்சு பாருங்க...

யாராவது கருவாட்டு  பிரியாணி செஞ்சு சாப்பிட்டிருக்கிங்களா? இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக பிரியாணி பிரியர்களுக்கும் கருவாட்டு பிரியர்களுக்கும் பிடிக்கும்.

யாராவது கருவாட்டு பிரியாணி செஞ்சு சாப்பிட்டிருக்கிங்களா? இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக பிரியாணி பிரியர்களுக்கும் கருவாட்டு பிரியர்களுக்கும் பிடிக்கும்.

யாராவது கருவாட்டு பிரியாணி செஞ்சு சாப்பிட்டிருக்கிங்களா? இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக பிரியாணி பிரியர்களுக்கும் கருவாட்டு பிரியர்களுக்கும் பிடிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சாதாரணமாக நாம் அனைவரும் கருவாட்டில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம். யாரவது பிரியாணி செஞ்சு சாப்பிட்டுருக்கிங்களா? ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக பிரியாணி பிரியர்களுக்கும் கருவாட்டு பிரியர்களுக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

கருவாடு - அரை கிலோ

சின்ன வெங்காயம் - அரை கிலோ

பழுத்த தக்காளி - அரை கிலோ

பச்சை மிளகாய் - 5

மிளகாய் பொடி - தேவையான அளவு

தயிர் - ஒரு கப்

எலுமிச்சை - அரை பழம்

கொத்தமல்லி இலை - ஒரு கைபிடி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

புதினா - ஒரு கைபிடி

பட்டை, ஏலம், கிராம்பு,பிரியாணி இலை - தலா இரண்டு

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - 200 மில்லி

நெய் - 50 மில்லி

பச்சரிசி - 1 கிலோ

செய்முறை:

1.பச்சரிசியை ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

2. பிரியாணிக்கு தேவையான அனைத்தையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். முதலில் தக்காளி, வெங்காயத்தை வெட்டிக்கொள்ள வேண்டும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

4. பின்னர் அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்க வேண்டும். அதன் பிறகு வறுத்த கருவாட்டை போட்டு வேக விட வேண்டும்.

5. அதன்பின் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்க் வைக்க வேண்டும். கொதி வந்ததும் நெய் ஊற்றி அதில் ஊற வைத்த அரிசியை போட வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

6. அதன் பிறகு தட்டை போட்டு 20 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன்மேல் கனமான பத்திரம் அல்லது தோசை கல்லை வைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

மேலும் படிக்க... மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபட உதவும் வெஜிடபிள் ஜூஸ்..!

First published:

Tags: Fish, Food