அரிசிகளின் கருப்பு கவுனி. இந்த அரிசியானது, அரிசி வகைகளிலேயே மிகச்சிறந்ததாக இருக்கிறது. நார்ச்சத்துக்களின் மூலாதாரமாக விளங்குகிறது கருப்பு கவுனி அரிசி, தாவர அடிப்படையிலான புரதத்தினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை அளவு உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. அத்தகைய கருப்பு கவுனியில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
கருப்பு கவுனியின் பயன்கள்:
1. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது...
2. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
3. இதில் இனிப்பு பொங்கல் , பாயாசம் , சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை ஆகியவை செய்து சாப்பிடலாம்.
4. கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க... கவுனி அரிசியில் எப்படி இனிப்பு செய்வது தெரியுமா?
5. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.