ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

பொறி உருண்டை

பொறி உருண்டை

Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.

தேவையானவை:

நெல் பொரி

வெல்லம்

நெய்

பல்பல்லாகக் கீறிய தேங்காய் சிறிது

பொதுவாக அரைக்கிலோ பொரிக்குக் கால்கிலோ வெல்லம் என்பது கணக்கு. அதுடன் தேவையான அளவில் தண்ணீர்.

Also see... உணவுக்கு முன் அல்லது பின்... பந்தியில் ஸ்வீட் வைத்தால் எப்போது சாப்பிட வேண்டும்..?

செய்முறை:

1. முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
2. பின்பு அதை இறக்கி வடிகட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
3. கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.
4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டுப் பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும்.
5. பாகு நன்றாக உருட்ட வந்தால் இறக்கி அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டுகளையும் அதோடு சேர்த்துக் கிளற வேண்டும்.
6. பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் முன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.
7. நெல் பொரிபோலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் இந்த உருண்டையை செய்யலாம்.
First published:

Tags: Karthigai Deepam, Sweet recipes