ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

திருகார்த்திகைக்கு பஞ்சு போல நெய் அப்பம் செய்யனுமா? இதை ட்ரை பண்ணுங்க...

திருகார்த்திகைக்கு பஞ்சு போல நெய் அப்பம் செய்யனுமா? இதை ட்ரை பண்ணுங்க...

நெய் அப்பம்

நெய் அப்பம்

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெய் அப்பம் கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது. கண்டிப்பாக  பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் இது மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை எப்படி செயனும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி

ஏலக்காய் – 1

சமையல் சோடா – 3 சிட்டிகை

உப்பு – 1/8 தேக்கரண்டி

நெய் – தேவைக்கேற்ப

Also see... கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

செய்முறை

1. முதலில் அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும்.
2. தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். 
3. வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். அதன் பின்னர் வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும்.
4. அதன் பின்னர் பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய், ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
5. அதில் 3/4 பங்கு மாவை ஊற்றவும். மிதமான தீயில், மூடி வேக விடவும்.
6. சிவந்ததும் பணியாரங்களை திருப்பவும்.  இரு புறமும் சிவந்ததும், எடுத்து, சூடாக பரிமாறலாம். இப்போது சுவையான பஞ்சு போல நெய் அப்பம் தயார்.
First published:

Tags: Karthigai Deepam, Sweet recipes