ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Karthigai Deepam Special | கார்த்திகை தீபத்திற்கு சட்டென சிம்பிளாக செய்ய பொரி உருண்டை ரெசிபி.!

Karthigai Deepam Special | கார்த்திகை தீபத்திற்கு சட்டென சிம்பிளாக செய்ய பொரி உருண்டை ரெசிபி.!

பொரி உருண்டை

பொரி உருண்டை

Karthigai Deepam 2022 | வெல்லத்தை பாகாக காய்ச்ச ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து 1 கப் வெல்லத்திற்கு 1/4 கப் தண்ணீர் வீதம் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக கரைந்த பின் பாகை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திகைக்கு ஏதேனும் ஒரு ஈஸியான இனிப்பு செய்யலாம் என நினைப்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பொரி உருண்டை. இதை பொதுவாக கடைகளில் வாங்கி சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் வீட்டிலேயே குறைந்த பொருட்களை வைத்து எளிதில் செய்யலாம். குறிப்பாக இந்த கார்த்திகைக்கு சட்டென செய்ய ஈஸியான பொரி உருண்டை ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள் : 

அவல் பொரி - 4 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு / நல்லெண்ணய் - 1 டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

செய்முறை :

அவல் பொரியை சுத்தமாக முறத்தில் புடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பொரி மொறுமொறுப்பு தன்மை இல்லையெனில் ஒரு வானெலியில் பொரியை எண்ணெய் ஏதும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
வெல்லத்தை பாகாக காய்ச்ச ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து 1 கப் வெல்லத்திற்கு 1/4 கப் தண்ணீர் வீதம் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக கரைந்த பின் பாகை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின் பாகு முறுகிப் போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது நல்லெண்ணய் ஒரு டீஸ்பூன் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு ஏலக்காய் பொடியையும் சுக்கு பொடியையும் சேர்த்து நன்றாக களறிக் கொள்ளுங்கள்.
கலந்த பின் தாமதிக்காமல் அவல் பொரியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கிளறிய பின் அடுப்பை அனைத்து விடுங்கள். அதன்பின் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நன்றாக மறுபடியும் கிளற வேண்டும்.
அதன்பின் கையில் நெய் தடவி உருண்டை பிடித்தால் சுவையான அனைவருக்கும் பிடித்த பொரி உருண்டை தயார்.!
First published:

Tags: Karthigai Deepam, Sweet recipes, Sweets